சத்துணவு மாணவர்களுக்கு முட்டை வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
05:10

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 60 ஊராட்சிகளில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 120 சத்துணவு மையங்கள் உள்ளன. இங்கு 14 ஆயிரத்து 781 மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பள்ளிகள் திறக்கவில்லை. இதையொட்டி மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உணவு பொருட்களான அரிசி, துவரம் பருப்பு ஆகியவை வழங்கப்படுகிறது.2 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாள்தோறும் 100 கிராம் அரிசி, 40 கிராம் துவரம் பருப்பும், 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு 150 கிராம் அரிசி, பருப்பும் வழங்கப்படுகிறது.செப்டம்பர் மாதத்தில் பள்ளி வேலை நாட்களான 22 தினங்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவதற்காக ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 39 ஆயிரத்து 332 கிலோ அரிசியும், 15 ஆயிரத்து 187 கிலோ பருப்பும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல் முறையாக முட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.ஒரு மாணவருக்கு 10 முட்டைகள் வீதம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 810 முட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இளையனார்குப்பம் நடுநிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் பி.டி.ஓ., செல்வகணேஷ் மாணவர்களுக்கு முட்டைகளை வழங்கினார். துணை பி.டி.ஓ., அயூப்கான், பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X