| வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம் Dinamalar
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2020
05:10

திருக்கோவிலுார்; வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திருக்கோவிலுாரில் நடந்தது.தாலுகா அலுவலகத்தில், வரும் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தாசில்தார் சிவசங்கரன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் கங்காலட்சுமி வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர் பாபு, தீயணைப்பு மற்றும் கால்நடைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயலாற்றுவது குறித்து கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டது.நிறைவாக தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கையை தாலுகா அலுவலக வளாகத்தில் செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X