மாவட்டத்தில் 347 பேர் மீது வழக்கு: ரூ.76,600 அபராதம் விதித்து வசூல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
09:28

நாமக்கல்: வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய, 347 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம், காவல் துறை இணைந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று, மாவட்டத்தில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம் அணியாத, 323 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 64 ஆயிரத்து, 600 ரூபாய் அபராதம் விதித்தனர். பொது இடங்களில் எச்சில் துப்பிய, 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11 ஆயிரத்து, 500 ரூபாய், பொது இடங்களில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத, ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 500 ரூபாய் என, மொத்தம், 347 பேருக்கு, 76 ஆயிரத்து, 600 ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. 'கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர, அனைத்து பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களும், அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என, எஸ்.பி., சக்தி கணேசன் கேட்டுக் கொண்டார்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X