ப.வேலூர் - மோகனூர் - திருச்சி அரசு பஸ்களை இயக்க வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
09:29

ப.வேலூர்: ப.வேலூர் - மோகனூர் மற்றும் மோகனூர் - திருச்சி வரை இரண்டு தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்குவது தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது, பஸ்களை இயக்குவதற்கு அரசு உத்தர விட்டது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் பொது போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. ஆனால், ப.வேலூர் பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல், திருச்செங்கோடு, கரூர், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், ப.வேலூர் வழியாக சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயங்கி வருகின்றன. ப.வேலூர் - மோகனூர் மற்றும் மோகனூர், காட்டுப்புத்தூர் வழியாக திருச்சிக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளில் இரண்டு தனியார் பஸ்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இந்த இரண்டு பஸ்கள் ப.வேலூர் வந்து செல்கின்றன. பாலப்பட்டி, மணப்பள்ளி, மோகனூர், காட்டுப்புத்தூர், தொட்டியம், முசிறி வழியாக திருச்சி செல்லும் பஸ்கள் இயக்கப்படாததால் பல்வேறு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, ப.வேலூர் - மோகனூர் வழியாக காட்டுப்புத்தூருக்கும், மோகனூர் வழியாக திருச்சிக்கும் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X