கலப்பு திருமணம் செய்தவரை தாக்கி மொட்டை அடிப்பு; ஆறு பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2020
00:49

வாழப்பாடி:கலப்பு திருமணம் செய்த மகனை தாக்கி, மொட்டையடித்து அவமானப்படுத்திய தாய், சகோதரர், சகோதரி உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.



சேலம் மாவட்டம், சின்னமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த, வரதராஜ் மகன் அருள்குமார், 25; வாழப்பாடியில் பேக்கரியில் பணிபுரிந்தார். தாண்டானுாரை சேர்ந்த, 17 வயது சிறுமி, வாழப்பாடியில் மளிகைக் கடையில் பணிபுரிந்தார்.அருள்குமார், சிறுமி இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால், இருவீட்டு பெற்றோரும் எதிர்த்தனர்.



கடந்த ஜனவரியில் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், கலப்பு திருமணம் செய்து கொண்டனர். பிப்ரவரியில், சிறுமியின் பெற்றோர் புகார்படி, வாழப்பாடி போலீசார், கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், அவர்கள், நாமக்கல், பள்ளிபாளையத்தில் இருப்பது, அருள்குமாரின் குடும்பத்தினருக்கு தெரிந்தது.



குடும்பத்தினர் உட்பட ஏழு பேர், கடந்த, 23ல், அருள்குமாரை சின்னமநாயக்கன் பாளையத்துக்கு கடத்தி வந்து, தென்னை மட்டையால் தாக்கி, 'மொட்டை' அடித்து அவமானப்படுத்தினர். வாழப்பாடி போலீசார், அருள்குமாரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து, அருள்குமார் புகார்படி, தாய் அபிலா, 52, சகோதரி பரிமளா, 35, சகோதரர் நேரு, 32 மற்றும் உறவினர்கள் இருவர், கார் டிரைவர் ஆகிய ஆறு பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.



அருள்குமாரை திருமணம் செய்த சிறுமி, தற்போது, எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு, 18 வயது பூர்த்தியாகாததால், கடத்தல் வழக்கை, 'போக்சோ' வழக்காக, போலீசார் மாற்றியுள்ளனர். அருள்குமாரையும் கைது செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X