| '‛மாஜி' குற்றவாளிகளுக்கு பணி வழங்கிய நிறுவனங்கள் Dinamalar
'‛மாஜி' குற்றவாளிகளுக்கு பணி வழங்கிய நிறுவனங்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2020
07:43

கிண்டி : குற்றவாளிகள், மீண்டும் குற்ற செயலில் ஈடுபடுவதை தடுக்க, அவர்களுக்கு, வேலைவாய்ப்பு முகாம் வழியாக, தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டது.



இளம் சிறார் மற்றும் முதல் குற்றவாளிகளை சீர்திருத்த, காவல் துறை முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து, 21ம் தேதி முதல், ஐந்து நாட்கள், தொழிற்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம், கிண்டியில் நடத்தப்பட்டது.இதில், பயிற்சி வகுப்புக்கு பின், 34 முன்னாள் குற்றவாளிகள் மற்றும் இளம் சிறார்களை, இரண்டு தனியார் நிறுவனத்தில் பணியமர்த்த முன்வந்தது.



சிலருக்கு, கனரக வாகன ஓட்டுனர் பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்படிப்பு படிக்க விரும்பிய, ஆறு பேருக்கு, அரசின் ஊக்கத்தொகை பெற்று கொடுத்து, படிப்புக்கு உதவ முடிவு செய்யப்பட்டது.மொத்தம், 185 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்நிகழ்ச்சியில், சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X