| ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் புதிய 'ஆப்பிள் வாட்ச் சீரிஸ்' முன்பதிவு Dinamalar
ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் புதிய 'ஆப்பிள் வாட்ச் சீரிஸ்' முன்பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2020
07:47

சென்னை : ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் முன்பதிவுகள் துவங்கியுள்ளன.



நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் சில்லரை விற்பனையாளராக, 'ரிலையன்ஸ் டிஜிட்டல்' உள்ளது. நாடு முழுதும், 800 நகரங்களில், 400க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் மற்றும், 1800க்கும் மேற்பட்ட, 'மை ஜியோ' கடைகள் உள்ளன.இங்கு, புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ஆப்பிள் வாட்ச் எஸ்.இ., மற்றும் ஐபாட் 8வது ஜென் ஆகியவற்றுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன.



வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் உள்ள அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ், மை ஜியோ ஸ்டோர்ஸ் மற்றும் www.reliancedigital.in ஆகியவற்றில் முன்பதிவுகள் செய்யலாம். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மற்றும் வாட்ச் எஸ்.இ.,க்கான சில்லரை விற்பனை, அக்., 1ம் தேதி துவங்க உள்ளது.முன்னணி வங்கிகளின் கார்டுகளுக்கு, www.reliancedigital.in இணையதளத்தில், செப்., 30ம் தேதி வரை, ஐந்து சதவீதம் பணம் திரும்ப பெறும் சலுகை உள்ளது.



புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ரத்த ஆக்ஸிஜன் கண்டறிதல் அம்சம், புதிய ஸ்லீப் ஆப், அவசரகால எஸ்.ஓ.எஸ்., சேவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6ன் விலை, 40 ஆயிரத்து, 900 ரூபாயில் துவங்குகிறது. ஆப்பிள் வாட்ச் எஸ்.இ., 29 ஆயிரத்து, 900 ரூபாயில் துவங்குகிறது. ஐபாட் 8வது ஜென், 29 ஆயிரத்து, 900 ரூபாயில் துவங்குகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X