| 'காதலரை கைது செய்தால் தற்கொலை'; சேர்த்து வைக்க காதலி போர்க்கொடி Dinamalar
'காதலரை கைது செய்தால் தற்கொலை'; சேர்த்து வைக்க காதலி போர்க்கொடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2020
09:06

தலைவாசல்: 'காதலரை கைது செய்தால் தற்கொலை செய்து கொள்வேன். அவருடன் சேர்த்து வைக்க வேண்டும்' என, காதலி கூறியதால், போலீசார் திணறினர்.


சென்னை, பெருங்களத்தூரை சேர்ந்தவர் சசிகலா, 28. சென்னையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சேலம் மாவட்டம், தலைவாசல், வீரகனூரில், ஸ்டூடியோ நடத்தும் ரமேஷ், 29. இவர்கள், 'டிக்டாக்' மூலம் பழகி பேசி வந்தனர். இந்நிலையில், ரமேஷ் பலாத்காரம் செய்ததாக, கடந்த ஜூலை, 17ல், வீரகனூர் போலீசில் சசிகலா புகார் அளித்தார். நேற்று முன்தினம், அந்த ஸ்டேஷனுக்கு வந்த சசிகலா, ரமேஷ், கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, தற்கொலைக்கு முயன்றார். நேற்று நடந்த விசாரணையில், சசிகலாவை ஏற்க முடியாது என, ரமேஷ் கூறினார். இதையடுத்து, 'ரமே?ஷ கைது செய்தால், தற்கொலை செய்து கொள்வேன். திருமணம் செய்து வையுங்கள்' என, சசிகலா கோரினார். இதனால், முடிவெடுக்க முடியாமல் தவித்த போலீசார், இருவரையும் அடுத்த வாரம் விசாரணைக்கு வர அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X