மாநகராட்சிக்கு மூன்று துணை கமிஷனர்! பணியிடம் கேட்டு தமிழக அரசுக்கு கருத்துரு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

28 செப்
2020
02:10
பதிவு செய்த நாள்
செப் 27,2020 23:12

கோவை:கோவை மாநகராட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்த, மூன்று துணை கமிஷனர் பணியிடங்கள் தோற்றுவிக்க, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மிகப்பெரிய நகரமாகியுள்ளது. மாநகராட்சி எல்லை மட்டும், 257 சதுர கி.மீ., பரப்புக்கு பரந்து விரிந்துள்ளது; 100 வார்டுகள் இருக்கின்றன.கிட்டத்தட்ட, 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நோய் தொற்று பரவலுக்கு முன், பணி நிமித்தமாக, தினமும், 2 லட்சம் மக்கள், நகருக்கு வந்து சென்றனர்.


அப்பப்பா...எத்தனை பணிகள்!


மாவட்ட எல்லைக்குள் வசிக்கும் மக்களில், 50 சதவீதத்தினர், மாநகராட்சி பகுதியில் வசிக்கின்றனர். அவர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு, மாநகராட்சி நிர்வாகத்தை சேர்ந்தது.தற்போது, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.1,000 கோடிக்கு பணிகள், 'ஸ்வட்ச் பாரத்', 'அம்ரூட்', 'டூரிப்' என, பல்வேறு திட்டங்களின், ஏகப்பட்ட பணிகள் நடக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் உயரதிகாரிகள் கள ஆய்வுக்குச் செல்ல வேண்டியுள்ளது.



இதுதவிர, அலுவலக நிர்வாகம், பொது சுகாதாரம், வரி வருவாய் ஈட்டுதல், பொதுமக்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் கவனிக்க வேண்டும்.ஒவ்வொரு மண்டலத்துக்கும் உதவி கமிஷனர்கள் இருந்தாலும், கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் கண்காணித்து, அறிவுரை வழங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.அதிகாரிகள் பத்தாதுஅதனால், துணை கமிஷனர் (நிர்வாகம்), துணை கமிஷனர் (பொது சுகாதாரம்), துணை கமிஷனர் (வளர்ச்சி பணிகள்) என, மூன்று பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன், இதே கோரிக்கையை, தமிழக அரசின் கவனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் கொண்டு சென்றபோது, 'புதிய பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டிய அவசியம் ஏன் எழுந்துள்ளது' என்கிற தகவல்களை சமர்ப்பிக்கத் தவறியதால், நிராகரிக்கப்பட்டது.தற்போது நகரம் வளர்ச்சி அடைந்துள்ளதால், மக்கள் தொகை பெருக்கம், வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை பட்டியலிட்டு, மீண்டும் ஒப்புதல் பெற, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.


பணியிடங்கள் தாறுமாறு!மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சியில் ஏகப்பட்ட பிரிவுகள் இருக்கின்றன. அதில், பணியிடங்கள் ஒழுங்கற்று உள்ளன. துறை தலைவருக்கு கீழ் என்னென்ன பணியிடங்கள் இருக்க வேண்டும்; எத்தனை ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என முடிவெடுக்க வேண்டும். ஏகப்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நிறைய பணியிடங்கள் கூடுதலாக உருவாக்க வேண்டியுள்ளது. அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப இருக்கிறோம்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-செப்-202008:38:01 IST Report Abuse
Bhaskaran ஒருத்தர் மட்டும் சாப்பிட்டால் எப்படி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X