மரக்கன்று அடர் நடவு திட்டம்: இடம் தேர்வு பணி துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2020
23:59

உடுமலை:உடுமலை ஒன்றியத்தில், மரக்கன்றுகள் அடர்நடவு திட்டத்தை செயல்படுத்த, இடம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மேம்படுத்தவும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில், மரக்கன்று நடுதல் மற்றும் பராமரிப்பு பணிகளும் உள்ளது. நடப்பாண்டில், மழைவளம் அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில், உடுமலை ஒன்றியத்தில், நடப்பாண்டில், மரக்கன்று நடுவதற்கான இலக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 'மியாவாக்கி' எனப்படும் அடர் நடவு திட்டத்தை செயல்படுத்தவும், ஒன்றியக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுவதற்கு, ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறிப்பிட்ட இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தவிர, மரக்கன்றுகள் அடர் நடவு செய்வதற்கு, ஊராட்சிகளில் இடம் தேர்வு செய்யும் பணிகள், தற்போது துவக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X