| அம்மப்பள்ளி அணை திறப்பு Dinamalar
அம்மப்பள்ளி அணை திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2020
00:09

திருத்தணி : அம்மப்பள்ளி அணை, இரவில் திறப்பதால், வருவாய் துறை அலுவலர்கள், கிராமங்களில் தங்கியிருக்க வேண்டும் என, கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.




ஆந்திர மாநிலம், கார்வேட்நகர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அம்மப்பள்ளி அணையில், தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், இரு நாட்களாக உபரிநீர், இரவு, 9:30 மணி முதல், அதிகாலை, 4:00 மணி வரை மூன்று ஷிட்டர்கள் மூலம் திறந்து, கொற்றலை ஆற்றில் தண்ணீர் விடப்படுகிறது.இந்த தண்ணீர் பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி தாலுகாவில் பாய்ந்து வெள்ளமாக ஓடுகிறது.



இது குறித்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா நேற்று கூறியதாவது:கொற்றலை ஆற்றில் வெள்ளம் ஓடுவதால், ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்று பகுதிக்கு செல்லக்கூடாது.மேலும், தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த பகுதியில் தங்கியிருந்து, கண்காணிக்க வேண்டும். அதே போல், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X