| வாடகை கேட்டதால் 'சதக்'; சூளைமேடு பெண் கொலை Dinamalar
வாடகை கேட்டதால் 'சதக்'; சூளைமேடு பெண் கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2020
00:09

சூளைமேடு : சூளைமேடில், வாடகை பாக்கியை கேட்ட வீட்டு உரிமையாளரின் மனைவி, குத்தி கொலை செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.



கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.சென்னை, சூளைமேடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையைச் சேர்ந்தவர், சந்திரமோகன், 60. இவரது மகன் சதீஷ், 35; வாட்டர் வாஷ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி, சுகன்யா, 28.இவர்களது வீட்டின் மாடியில் நாராயணன், 55, என்பவர், 20 ஆண்டுகளாக, வாடகைக்கு குடியிருந்து வருகிறார். நான்கு மாதங்களாக வாடகை அளிக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு வந்த நாராயணனிடம், வீட்டு உரிமையாளர் சதீஷ் வாடகை கேட்டுள்ளார்.



மேலும், வாடகை தரவில்லை என்றால், வீட்டை காலி செய்ய வேண்டும் என, அறிவுறுத்திஉள்ளார்.இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், ஆத்திரமடைந்த நாராயணன், வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து, சுகன்யாவை சரமாரியாக குத்தினார்.அதை தடுக்க வந்த, சதீஷ் மற்றும் அவரது தந்தை சந்திரமோகனையும், சரமாரியாக குத்திவிட்டு தப்பினார்.



அக்கம் பக்கத்தினர், காயமடைந்த மூவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதில், சுகன்யா இறந்தார். இது குறித்து, சூளைமேடு போலீசார் விசாரித்தனர். இதில், தப்பியோடிய நாராயணனை, பாரதியார் தெரு அருகே, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X