சென்னையில் தொடர் வழிப்பறி; 8 பேர் கும்பல் சுற்றிவளைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
00:21

தண்டையார்பேட்டை : சென்னையில் அட்டூழியத்தில் ஈடுபட்ட வழிப்பறி கும்பலை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.



சென்னை, தண்டையார்பேட்டை, தாண்டவராயன் தெருவைச் சேர்ந்தவர், பொன்னம்மாள், 65. இவர், நான்கு நாட்களுக்கு முன், அதிகாலை வேளையில், வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தார்.அப்போது, அங்கு பதுங்கியிருந்த, அடையாளம் தெரியாத இருவர், மூதாட்டியின், 4.5 சவரன் தங்க செயினை பறித்து தப்பினர்.



இது குறித்து, தண்டையார்பேட்டை போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், வழிப்பறியில் ஈடுபட்ட, மயிலாப்பூரைச் சேர்ந்த ராகுல், 26, வண்ணார பேட்டையைச் சேர்ந்த பரத்குமார், 19, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.



விசாரணையில், சென்னை முழுதும் குழுவாக செயல்பட்டு, நடமாட்டம் இல்லாத சாலைகளை கண்காணித்து, அவ்வழியே செல்வோரிடம், மொபைல், தங்க நகைகள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும், டூ - வீலர்களை திருடுவது, இக்கும்பலின் வழக்கம் என்பது தெரிய வந்தது.



பகல் நேரங்களில், இக்குழு தனித்தனியே பிரிந்து, பல இடங்களுக்கு சென்று, கடைகளில் உணவு உண்பது போல, தெருக்களில் நோட்டமிடுவதும், அதிகாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு, திருட்டு பொருட்களை உடனுக்குடன் விற்றதும் தெரிய வந்துள்ளது.



பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின்படி, உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர், ஆய்வாளர் ஷீலாமேரி தலைமையிலான தனிப்படை போலீசார், வழிப்பறியில் தொடர்புடைய, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, சஞ்சய், 20, விஜய், 22, மணிகண்டன், 24, கார்த்திக், 19, ஆவடியைச் சேர்ந்த, ராகேஷ், 19, தனுஷ், 24, ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.



இவர்கள் மீது, அண்ணா நகர், வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகள் உள்ளன. அவர்களிடமிருந்து, 13 மொபைல் போன்கள், மூன்று கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பின், எட்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X