ஆள் கடத்தல் கும்பலில் மூவர் கைது: அவிநாசி அருகே போலீசார் 'அதிரடி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
00:24

அவிநாசி:அவிநாசியில் நடந்த, அரிவாள் வெட்டு சம்பவத்தில், தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், ஆள் கடத்தல் கும்பல் என்ற 'பகீர்' தகவல் தெரியவந்துள்ளது.கடந்த, 23ம் தேதி இரவு, ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர், 47, நண்பர்களுடன், காரில், அவிநாசி பைபாஸ் ரோட்டில், கொடுமுடி நோக்கி சென்றுகொண்டிருந்தார்.


திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதுார் பகுதியில், அவரது காரை வழிமறித்த, மற்றொரு காரில் வந்த சிலர், தட்சிணாமூர்த்தியின் கையை, அரிவாளால் வெட்டிவிட்டு, தலைமறைவாயினர்.அவிநாசி போலீசார் நடத்திய விசாரணையில், வாகனத்தை முந்திச் செல்வதில், இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில், இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு அவிநாசி, தெக்கலுார் அருகே செங்காளிபாளையம் பகுதியில், போலீசார் ஒரு காரை சோதனையிட்டனர்.காரில் வந்தவர்கள், திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்த முகமது ஷபி, 29, மேற்கு பல்லடம் பகுதியைச் சேர்ந்த மனோஜ், 30, திருப்பூர் கே.என்.பி., காலனியை சேர்ந்த மர்ஜுக், 30 என்பதும், அரிவாளால் வெட்டிய கும்பல், இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. அவர்கள், தங்கள் காரில் கருமத்தம்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவரை கடத்தி, பணம் பறிக்க கொண்டு செல்வதும் தெரியவந்தது. தகவலின் அடிப்படையில், கருமத்தம்பட்டி போலீசார் கார்த்திக்கை மீட்டு சென்றனர்.போலீசார் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட கும்பல், ஆள் கடத்தலில் ஈடுபட்டு, பணம் பறிப்பதை தொழிலாக கொண்டுள்ளது. முக்கிய குற்றவாளியான முகமது ஷபி, மனோஜ் மீது, பல்லடம், கோவை உள்ளிட்ட இடங்களில், ஆள் கடத்தல், பணம் பறித்தல், கொள்ளை என, 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன' என்றனர். மூவரும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X