வேளாண் உதவித்தொகை திட்ட மோசடியில் சுய உதவிக்குழு தேசிய வேலைவாய்ப்பு திட்ட உறுப்பினர்களுக்கும் தொடர்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
01:17

மதுரை:மதுரை மாவட்டத்தில் பிரதமர் வேளாண் உதவித்தொகை திட்ட மோசடியில் மகளிர் சுய உதவி குழுவினர், தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்ட உறுப்பினர்கள் பணம் பெற்றது விசாரணை குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுவரை ரூ.1.40 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டது.



இம்மாவட்டத்தில் இத்திட்டத்தில் 16,474 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 11,135 பேர் தகுதியற்றவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. கலெக்டர் வினய் அறிவுறுத்தல்படி 13 ஒன்றியங்களிலும் வேளாண் துணை இயக்குனர்கள் தலைமையில் விசாரணை குழுவினர் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து மோசடியாக பெற்ற பணத்தை திரும்ப வசூலித்து வருகின்றனர்.



இவர் வங்கி கணக்கில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்ததால் அவர்களை நேரில் தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப பெற அறிவுறுத்தி வருகின்றனர்.திருமங்கலம் ஒன்றியம் காங்கேயநத்தம் உள்ளிட்ட பல கிராமங்களில் வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் தலைமையில் குழுவினர் நேற்று விசாரித்தனர்.



இதற்கிடையில் பல ஒன்றியங்களில் மகளிர் சுய உதவிக்குழு, தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்ட உறுப்பினர்கள் பலர் இத்திட்டத்தில் பணம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலுள்ளவர்கள் பெயரிலுள்ள நில ஆவணங்களை சமர்ப்பித்து நிதி பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பணத்தை திருப்ப செலுத்தாத பட்சத்தில் மோசடி வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்ததையடுத்து பலர் பணத்தை திரும்ப செலுத்த முன்வந்துள்ளனர்.



ஒன்றியங்களில் சில புரோக்கர்கள் தகுதியற்றவர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி பணம் பெற்று கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆனால் தங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் புரோக்கர்களை வெளிப்படையாக அடையாளம் காட்ட தயங்குகின்றனர். விரைவில் மோசடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X