தவிப்பு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட பயனாளிகள் : 12 ஆயிரம் பேருக்கு மானியம் வழங்காததால் சிரமம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
01:30

கம்பம்: அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தேனி மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் வீடு கட்டி முடித்த 6 மாதங்கள் கடந்தும் மானியம் வழங்காததால் கடன் பெற்று வீடு கட்டியவர்கள் சிரமத்தில் தவிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டம் 2023 மற்றும் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு' கட்டம் திட்டத்தின் கீழ் குடிசை, ஓட்டு வீடுகளில் வசிப்போர், தங்கள் வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டிக்கொள்ள குடிசை மாற்று வாரியம் அறிவிப்பு செய்தது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.



இந்த திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் உள்ள 12 ஆயிரம் பயனாளிக்கு வீடு கட்ட 2020 பிப்ரவரியில் அனுமதி வழங்கப்பட்டது. இவர்களுக்கு இதுவரை மானியம் வழங்கவில்லை.



கடன் பெற்று கட்டடப்பணி:





பயனாளிகள் கூறுகையில், அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் 30 பேருக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அஸ்திவாரம் அமைத்தவுடன் ரூ. 50 ஆயிரம், சுவர்கள் எழுப்புதலுக்கு ரூ. 50 ஆயிரம், கான்கிரீட் பணிக்கு ரூ. 50 ஆயிரம், வர்ணம் பூசுதல் நிறைவு செய்த பின் ரூ. 60 ஆயிரம் வழங்கப்படும் என்றனர்.



இதை நம்பி நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியும் வீடு கட்டும் பணியை முடித்து போட்டோ எடுத்து அனுப்பியுள்ளோம். இதுவரை மானியம் வழங்க வில்லை' என்றனர்.



கோட்டம் மாற்றியதால் தாமதம்:





மதுரை கோட்ட நிர்வாக பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் இருந்த தேனி மாவட்டத்தை, திருநெல்வேலி கோட்டத்துடன் திடீரென இணைத்துவிட்டனர். இந்த பயனாளிகளின் விபரங்கள் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி கோட்ட நிர்வாக பொறியாளர் இவர்களுக்கான மானியத்தை இன்னும் விடுவிக்காததால் தாமதமாகிறது' என குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X