செய்தி சில வரிகளில்...: திண்டுக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
02:05

'கொடை'யில் கூட்டம்



கொடைக்கானல்: வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம்

அலைமோதியது. காலையில் சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் இதமான சாரல்,

தரையிரங்கிய மேகக்கூட்டம் என ரம்யமான சூழல் நிலவியது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பூங்காக்கள், கோக்கர்ஸ்வாக் மற்றும் சிற்றருவிகளை பயணிகள் கண்டு ரசித்தனர். குளு, குளு நகரில்

காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.



மாதிரி காய்கறி தோட்டம்



திண்டுக்கல்: செம்பட்டி பி.டி.ஓ., அலுவலகம், ஆத்துார் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஊட்டசத்து மாதத்தை முன்னிட்டு மாதிரி காய்கறி தோட்டம் அமைக்கும் விழா நடந்தது.திட்ட அலுவலர் காலின் செல்வராணி, காந்தி கிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் சரவணன், மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ஸ்ரீகுமாரி காய்கறி செடிகளை

நட்டனர்.பி.டி.ஓ., ஜெயசந்திரன், மேற்பார்வையாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா

பங்கேற்றனர்.



சுற்றுலா தலங்கள் ஆய்வு



கொடைக்கானல்: சுற்றுலா தலங்களில் சீசன் நேரத்தில் கூட்டத்தை தவிர்க்க புதிய சுற்றுலா தலங்களை கண்டறிய சுற்றுலா துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தனியார் அமைப்பு புதிய சுற்றுலா தல பகுதிகளை ஆய்வு மேற்கொண்டது. பேத்துப்பாறை, பள்ளங்கி, கோம்பை, பூம்பாறை, தடியன்குடிசையில் சுற்றுலாத்துறை ஆய்வு மேற்கொண்டது. மேம்பாட்டு வளர்ச்சி, மலைப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டறிந்தனர். உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன்

பங்கேற்றார்.



சர்ச்சையில் சமுதாய கூடம்



வடமதுரை: செங்குளத்துபட்டியில் வேடசந்துார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில்

சமுதாய கூடம் ரூ.8.50 லட்சத்தில் கட்டுப்பட்டு 4 மாதங்களாகியும் திறப்பு விழா நடக்காததால் பயனற்று கிடக்கிறது. கட்டடத்தின் ஒரு பக்கத்தில் குறிப்பிட்ட ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாலே திறப்பு விழா தள்ளி போவதாக சமூக வலை தளங்களில் புகார் கூறிய பதிவு

வைரலாக பரவியது. ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு தீர்வு கண்டு விரைவில் சமுதாய கூடத்தை திறக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.



ஆன்மிக ஸ்தல யாத்திரை



எரியோடு: திருஅருள் பேரவை தொண்டர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது 32ம் ஆண்டில் முதல் வாரம் மேட்டுபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், நேற்று முன்தினம் 2வது வாரமாக கெட்டியபட்டி ஸ்ரீகதிர்நரசிங்க பெருமாள் கோயிலுக்கு சென்றனர். பேரவை தலைவர் என்.ராமகிருஷ்ணன், செயலாளர் எம்.பழனிச்சாமி, ஓய்வு துணை கலெக்டர் மாரிமுத்து

பங்கேற்றனர்.



92 கிராமங்கள் தேர்வு



திண்டுக்கல்: வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை தெரிவித்தது: தேசிய மண்வள இயக்க திட்டத்தில் 14 வட்டாரங்களில் இருந்து 92 கிராமங்கள் தேர்வாகியுள்ளன. இக்கிராமங்களில் 5215 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இங்கு ஒரு எக்டேருக்கு செயல் விளக்க திடல் அமைய

உள்ளது. மண்ணில் உள்ள சத்துக்களை அறிந்து அதற்கேற்ப உரமிட்டு மகசூலை

அதிகரிக்கலாம். விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண்ணில் உள்ள சத்துக்கள் குறித்து

திண்டுக்கல் மண் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்து அறியலாம்.



கொரோனா விழிப்புணர்வு



திண்டுக்கல்: ரயில்வே ஸ்டேஷனில் இளைஞர் அமைப்பும், போலீசாரும் இணைந்து முகக்

கவசம் இல்லாமல் வரும் பயணிகளிடம் முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கபசுர குடிநீர், இலவச முகக்கவசம்

வழங்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார்,எஸ்.ஐ., பாலசுப்பையா, சுகாதார ஆய்வாளர் சதீஷ், இளைஞர் அமைப்பினர், தன்னார்வலர்கள்

பங்கேற்றனர்.



ஆறு பேர் கைது



நெய்க்காரப்பட்டி: பழநி, வரதமாநதி, அண்ணாநகர் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டு

விளையாடினர். ரோந்து சென்ற பழநி தாலுகா போலீசார், சிரஞ்சீவி 29, செல்வராஜ் 38, எவிக்சன் நகர் அழகன் 50, அண்ணாநகர் அன்பழகன் 61, ராமதாஸ் 60, ஆகியோரை கைது செய்தனர். இதே போல் குஜிலியம்பாறையில் எஸ்.ஐ., செல்வராஜ் தலைமையில் பாளையம் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், லாட்டரி சீட்டு விற்ற ஜாமியாலமை 54 கைது செய்து, ரூ.3950 லாட்டரி

சீட்டுகளைபறிமுதல் செய்தனர்.



உலக சுற்றுலா தினம்



கொடைக்கானல்: உலக சுற்றுலா தின விழா சுற்றுலா அலுவலர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.விடுதிகள் சங்க செயலர் அப்துல்கனிராஜா, வர்த்தக சங்க தலைவர் அப்பாஸ் பங்கேற்றனர். இதில் கிராமிய சுற்றுலா தலங்களை ஊக்குவிப்பது, சுற்றுலா தலங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் புகைப்படம் எடுத்தவர்களுக்கு விருது

வழங்கப்பட்டது.



சூதாடிய மூவர் கைது



திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் சூதாட்டம் நடப்பதாக வந்த

புகாரையடுத்து தாலுகா எஸ்.ஐ., வேலுமணி தலைமையில் போலீசார் சோதனையில்

ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய ராஜேந்திரன் 35, கணேஷ் 50, பாலகிருஷ்ணன் 51 ஆகியோரை கைது செய்து, பணம் மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X