| கைதான வேளாண் துணை அலுவலர் 'சஸ்பெண்ட்' Dinamalar
கைதான வேளாண் துணை அலுவலர் 'சஸ்பெண்ட்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2020
08:23

சேலம்: பிரதமர் நிதியுதவி முறைகேடு விவகாரத்தில், வேளாண் துணை அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில், பிரதமர் நிதியுதவி திட்டத்தில், 6 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக, பெத்தநாயக்கன்பாளையம், வேளாண் துணை அலுவலர் அன்பழகன், 50, கடந்த, 22ல், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், மேலும், பல தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, உதவி இயக்குனர், வேளாண் அலுவலர், வேளாண் உதவி அலுவலரிடம், இன்று காலை, 11:00 மணிக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், அலுவலகத்தில் வைத்து, தனித்தனியே விசாரணை நடத்துகின்றனர். அதேநேரம், கைதான அன்பழகனை, 'சஸ்பெண்ட்' செய்து, சேலம் வேளாண் இணை இயக்குனர் கணேசன் உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X