களப்பணியாளர்களின் கொரோனா தடுப்பு பணிகள் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
21:48

அடையாறு:அடையாறு மண்டலத்தில், தொற்று தடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட கள பணியாளர்களை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு ஈடுபடுத்துவதால், கொரோனா பரவல் தடுப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.



சென்னையில், ஒரு மாதமாக, தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. கடந்த நான்கு நாட்களாக, ஆயிரத்தை தாண்டியது.தெற்கு வட்டாரத்தில், அடையாறு மண்டலத்தில் தான் பாதிப்பு அதிகம். இங்கு, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட களப்பணியாளர்களில், தொண்டு நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட களப்பணியாளர்கள், 19ம் தேதியுடன் நிறுத்தப்பட்டனர்.



மாநகராட்சி, நேரடியாக தேர்வு செய்த களப்பணியாளர்கள் உள்ளனர். இவர்கள், தொண்டு நிறுவன களப்பணியாளர்கள் பார்த்த பணியையும், சேர்த்து பார்க்கின்றனர்.தற்போது, வீடுகள் தோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடக்கிறது. இதில், அங்கன்வாடி மற்றும் மாநகராட்சி கீழ்நிலை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.அடையாறு மண்டலத்தில், கொரோனா தடுப்பு பணியில் உள்ள களப்பணியாளர்களை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு ஈடுபடுத்தி உள்ளனர்.



இதனால், தொற்று தடுப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் புலம்புகின்றனர்.இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:வருவாய் துறையின் கீழ், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடக்கிறது. தொற்று தடுப்பு பணியில் உள்ள களப்பணியாளர்களில் ஒரு பிரிவு, வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்களை கட்டாயப்படுத்தி, வாக்காளர் சரிபார்ப்பு பணிக்கு ஈடுபடுத்துகின்றனர்.



கேட்டால், 'தற்போது, கொரோனாவை விட, வாக்காளர் பட்டியல் பணி தான் முக்கியம்' என்கின்றனர்.ஏற்கனவே, களப்பணியாளர்கள் குறைவாக உள்ளனர். மீதமிருக்கும் நபர்களையும், வேறு பணிக்கு பயன்படுத்தினால், தொற்று பரவலை தடுக்க முடியாது. உயர் அதிகாரிகள் தலையிட்டு, நிலைமையை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X