மீண்டும் சூடுபிடித்த இயற்கை உரம் விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
22:35

சென்னை:சென்னை மாநகராட்சியில், வீடு தேடி வரும் இயற்கை உர விற்பனை, மீண்டும் அதிகரித்துள்ளது.



சென்னை மாநகராட்சியில், மக்கும் குப்பையில் இருந்து, இயற்கை உரம் தயாரித்து, கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, 139 நுண் உர மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள், 175 சிறு தொட்டிகள், 1,711 உறை கிணறு மையங்கள், 21 புதைக்குழி மையங்கள் மற்றும் இரண்டு வெர்மி உர மையங்கள் வழியாக, தரமான இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.



ஊரடங்கு காரணமாக, உரம் தயாரிப்பு மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வை அடுத்து, தற்போது உரம் தயாரிப்பு சூடுபிடித்துள்ளது. முன்பதிவு செய்து, வீடு தேடி வருவதால், உரம் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.



இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், காலி இடம், வீட்டு மாடியில் செடி, காய்கறி தோட்டம் அமைப்பவர்கள் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால், கடந்த, ஐந்து மாதம் உரம் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது, விற்பனை அதிகரித்துள்ளது.



மாநகராட்சி எல்லையில் வசிப்போருக்கு, இயற்கை உரம் தேவைப்பட்டால், 94451 94802 என்ற, 'வாட்ஸ் ஆப்' நம்பரில், பெயர், முகவரி, தேவைப்படும் பாக்கெட் போன்ற விபரங்களை அனுப்பினால், மாநகராட்சி ஊழியர்கள், வீடு தேடி வந்து, உரம் வினியோகம் செய்வர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X