| வட்டக்கிணறுகளில் குப்பை அடைப்பு :ஒரு வாரமாக குடிநீர் வினியோகத்தில் சிக்கல் Dinamalar
வட்டக்கிணறுகளில் குப்பை அடைப்பு :ஒரு வாரமாக குடிநீர் வினியோகத்தில் சிக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2020
23:26

ஆனைமலை:ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வட்டக்கிணறுகளில், குப்பை அடைத்து, ஒரு வாரமாக குடிநீர் வினியோகத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.ஆனைமலை அடுத்த மயிலாடுதுறையில், ஆழியாறு ஆற்றில் இருந்து, வேட்டைக்காரன்புதுார் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் பெறப்படுகிறது. திட்டத்தில், ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகள், கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் பேரூராட்சிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.


இந்நிலையில், வட்டக்கிணறுகளில் குப்பை அடைப்பு, மின் தடை உள்பட பல்வேறு பிரச்னைகளால், குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாக, பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.குடிநீர் வடிகால் வாரிய உதவிப்பொறியாளர் விஜயராம் கூறியதாவது:கடந்த, 20 நாட்களாகவே, காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பல நேரங்களில் மின்தடை ஏற்பட்டு, குடிநீர் வினியோகம் தாமதமாகிறது. ஆழியாறு அணையில் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விட்டதும், வட்டக்கிணறுகளில் மரம், செடிகள் என, குப்பைகள் அடைத்து, தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இரண்டு நாட்களுக்கு முன், இப்பிரச்னை சரிசெய்யப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், மின் தடையால் குழாய்களில் குடிநீர், 'ரிவர்ஸ்' ஆவதால் நேரம் விரயமாகிறது.இந்த பிரச்னையை சரிசெய்ய விரைவில் கருவிகள் பொருத்த உள்ளோம். கருவிகள் பொருத்தினால், மின்தடை ஏற்பட்டதும் தண்ணீர் 'ரிவர்ஸ்' ஆவது தடுத்து நிறுத்தப்படும். மின் வினியோகத்தில் உள்ள பிரச்னைகள் சரியானதும், வழக்கம் போல குடிநீர் வினியோகிக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X