மானியத்தில் திரவ, திட வடிவில் உயிர் உரங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
23:27

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வேளாண் துறையில், திரவ மற்றும் திட வடிவிலான உயிர் உரங்கள், 50 சதவீத மானியத்தில் அளிக்கப்படுகிறது.பயிர் வளர்ச்சி, நோய் கட்டுப்பாடு மற்றும் மண் வளத்தை பெருக்குவதில் உயிர் உர பயன்பாடு இன்றியமையாதது. பயிர்களுக்கு நன்மை விளைவிக்கும் நுண்ணுயிர்களை கண்டறிந்து, அவற்றை ஆய்வகங்களில் உருவாக்கி, பயிர் சாகுபடியில் உயிர் உரங்களாக பயன்படுத்தப்படுகிறது. அரசு வேளாண் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் உயிர் உரங்கள், வேளாண் துறையால் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகின்றன.தற்போது, பொள்ளாச்சி தெற்கு வேளாண் துறையில், திரவ மற்றும் திட வடிவிலான உயிர் உரங்கள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.திரவ வடிவிலான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் ரைசோபியம், 500 மி.லி., கேன்களில் கிடைக்கின்றன. இவற்றின் முழு விலை தலா, 150 ரூபாய். இவை, 50 சதவீத மானியத்தில் விற்கப்படுகிறது.பயன்படுத்தும் முறை குறித்து உதவி வேளாண் இயக்குனர் நாகபசுபதி கூறியதாவது:விதை நேர்த்தி செய்ய, சூடு ஆறிய அரிசி கஞ்சியில், ஏதாவது ஒரு திரவ உயிர் உரத்தை, 50 மி.லி., கலந்து, ஒரு ஏக்கருக்கான விதைகளை அதில் கலந்து, 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.நாற்று நடவுக்கு முன், தண்ணீரில், 100 மி.லி., உயிர் உரத்தை கலந்து, நாற்றின் வேர் நன்கு நனையும்படி, 30 நிமிடங்கள் வைத்திருந்து, நடவு செய்ய வேண்டும்.மக்கிய தொழு உரத்துடன் ஏக்கருக்கு, 200 மி.லி., கலந்து, விளை நிலத்தில் இடலாம். சொட்டுநீர் வழியே, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 1 மி.லி., என்ற கணக்கில் கலந்து பாசனம் செய்யலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.இதே உயிர் உரங்கள், திட வடிவிலும் கிடைக்கின்றன. தலா, 200 கிராம் கொண்ட பாக்கெட்டின் முழு விலை, ஆறு ரூபாய். இவற்றை, 50 சதவீத மானியத்தில் பெறலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X