ஆள் கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி? போலீசாரை பரபரப்பாக்கிய வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
23:29

அவிநாசி:அவிநாசியில், ஆள் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பரபரப்பு சம்பவம் நடந்துள்ளன.கடந்த, 23ம் தேதி, அவிநாசி பைபாஸ் ரோட்டில், ஈரோடு நோக்கி காரில் சென்று கொண்டிருந்த தட்சிணாமூர்த்தி என்பவரின் கையை, பின்நோக்கி வந்த கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு, தலைமறைவாகினர். இது தொடர்பாக, 3 பேரை அவிநாசி போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது.சிக்கியது எப்படி?குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க, அவிநாசியில் உள்ள ஒட்டுமொத்த போலீசாரும் களமிறங்கினர். நெடுஞ்சாலை ஓரமுள்ள, 50க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில், குற்றச்செயலில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட கார், 'மாருதி ஸ்விப்ட்' என்பது அடையாளம் காணப்பட்டது.ஆனால், அதன் எண், உரிமையாளர் விவரம் போன்ற எந்த விபரங்களும் தெளிவாக பதிவாகாததால், குழப்பம் ஏற்பட்டது. தொழில்நுட்ப உதவியுடன் காரின் பக்கவாட்டில் இருந்த நட்சத்திர வடிவ குறியீடு அடையாளம் காணப்பட்டது.அதனடிப்படையில்தான், தெக்கலுார் அருகே கார் சிக்கியது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட அரிவாள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.வேகம் கூட்டிய விவகாரம்இந்நிலையில், கடந்த, 26ம் தேதி, உடுமலையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உதவியாளர் மர்ம நபர்களால், 'சுவிப்ட்' காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவிநாசி போலீசாரால் தேடப்படும் கும்பலுக்கும், அந்த கடத்தல் சம்பவத்துக்கு தொடர்பு இருக்கலாம் என, சந்தேகம் கிளம்பிய நிலையில், கோவை மற்றும் திருப்பூர் போலீசாரின் கவனம் கூடஇந்த வழக்கின் மீது திரும்பியது.இதனால், தேடுதல் பணியில் வேகம் கூடியது. அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் அனைத்து போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் களமிறங்கினர். உச்சகட்ட 'டென்ஷன்' ஏற்பட்டதுபோலீசார் கூறுகையில், 'குறிப்பிட்ட சிலரை அடையாளம் கண்டு, திட்டமிட்டு, அவர்களை கடத்தி பணம் பறிப்பது இவர்களது தொழிலாக உள்ளது. ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை வாடகைக்கு எடுத்துள்ளனர்.வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்,' எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X