திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், நேற்று ஒரே நாளில், 697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம், 31 ஆயிரத்து, 630 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. நேற்று, 257 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை, 31 ஆயிரத்து, 887 ஆக உயர்ந்தது.இதுவரை, 29 ஆயிரத்து,754 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்; 544 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது, 1,589 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டில் 249
செங்கல்பட்டு மாவட்டத்தில், 34 ஆயிரத்து 601 பேருக்கு, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில், 32 ஆயிரத்து, 121 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.இந்நிலையில், பல்லாவரம் - 63, தாம்பரம் - 59, வண்டலுார் - 49, செங்கல்பட்டு - 37, திருப்போரூர் - 20, திருக்கழுக்குன்றம் - 11, மதுராந்தகம் - எட்டு, செய்யூர் - இரண்டு என, மொத்தம், 249 பேர், நேற்று பாதிக்கப்பட்டனர். மேலும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பேர் என, மொத்த பாதிப்பு, 34 ஆயிரத்து, 855 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 545 பேர் இறந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் 191
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று புதிதாக, 191 பேருக்கு, வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.காஞ்சிபுரம் நகராட்சியில் - 21, குன்றத்துார் தாலுகாவில் - 56, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் - தலா 18, உத்திரமேரூர் - ஒன்பது, வாலாஜாபாத் - ஐந்து, முகவரி சிக்கலில் உள்ள - 64 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 21 ஆயிரத்து, 869 ஆக உயர்ந்துள்ளது.