லெசீஸ், ஷீல்டு கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
23:56

சிவகங்கை : ''வைகையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், லெசீஸ், ஷீல்டு கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை முன்வர வேண்டும்,'' என சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.



கவுன்சில் கூட்டம் தலைவர் மஞ்சுளா பாலசந்தர் (அ.தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை தலைவர் கேசவன் (அ.தி.மு.க.,), பி.டி.ஓ., (ஊராட்சிகள்) பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.விவாதம் வருமாறு:பி.பத்மாவதி (அ.ம.மு.க.,): ஒன்றியத்தில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.பி.டி.ஓ.., பாஸ்கரன்: பயிர் காப்பீடு திட்டம் குறித்து விவசாயம், புள்ளியியல், வருவாய்துறையினர் ஆய்வு நடத்தி, இழப்பு விபரங்களை அறிவிப்பர்.



ரூ.1,756 கோடி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், இந்த ஒன்றியத்தில் 254 கிராமங்களில் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.துணை தலைவர்: கவுன்சிலர்கள் கூட்டத்திற்கான படியை ரூ.1,200ல்இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.பி.டி.ஓ.,: ஒன்றிய தலைவர்,கவுன்சிலர்களுக்கான கூட்ட படியை அரசு நிர்ணயிக்கிறது. அதன்படி தான் வழங்க முடியும்.எம்.கருப்பணன் (தி.மு.க.,):கொரோனாவை தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் தொடங்கிவிட்டது. கிராமங்களில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்தல் பணிகளை செய்ய வேண்டும். மேலும், துாய்மை பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க வேண்டும்.



எம்.சுந்தரராஜமூர்த்தி (தி.மு.க.,): வைகையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துள்ளனர். பெரியாறு கால்வாயில் லெசீஸ், ஷீல்டு கால்வாய்களை சுத்தம் செய்து, தடையின்றி தண்ணீர் கிடைக்க செய்யவேண்டும்.துணை தலைவர்: ஒன்றியத்தில் டெண்டர் கோர உரிய பதிவு பெற்ற கான்ட்ராக்டர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு விவாதம்நடந்தது. துணை பி.டி.ஓ., பத்மநாபன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X