போலீஸ் டைரி:காஞ்சி,திருவள்ளூர்,செங்கல்பட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
00:02

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி



மதுராந்தகம்: மதுராந்தகம், செங்குந்தர் பேட்டை, பொன்னியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சத்தியமூர்த்தி, 46. தனியார் கம்பெனி தொழிலாளி.இவர், நேற்று முன்தினம், தன் வீட்டில் குளிப்பதற்காக, குடத்தில் தண்ணீரை நிரப்பி, 'வாட்டர் ஹீட்டர்' கருவியின் கம்பியை, மின் இணைப்பு பெட்டியில் பொருத்தினார்.அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, சத்தியமூர்த்தி, அதே இடத்திலேயேஇறந்தார். மதுராந்தகம் போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.



போலி மருத்துவர் கைது



திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, பூண்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சீனிவாசன், 48. பி.எஸ்சி., படித்த அவர், அலோபதி மருத்துவம் செய்து வந்தார். இது குறித்து, ஊத்துக்கோட்டை தலைமை மருத்துவர் தீபா அளித்த புகாரையடுத்து, புல்லரம்பாக்கம் போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்ற காவலில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.



'லிப்ட்' அறுந்து விபத்து



மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த, புதுப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சேஷாத்ரி மனைவி சிந்து, 21; ஒன்பது மாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று, மீஞ்சூர், புங்கம்பேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் முதல்தளத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சி முடிந்து, சிந்து மற்றும் அவரது உறவினர்கள், 'லிப்ட்' வழியாக மண்டபத்தின் கீழ்தளத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென லிப்ட் ரோப் அறுந்தது. இதனால் லிப்ட் வேகமாக கீழே வந்து விழுந்தது.இதில், லிப்டின் உள்ளே இருந்த சிந்து மற்றும் அவரது உறவினர்கள் ஐந்து பேர் பலத்த காயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X