| அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி: தபால் துறை அறிவிப்பு Dinamalar
அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி: தபால் துறை அறிவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2020
00:18

உடுமலை:தபால் துறை வார விழா, அக்., இரண்டாம் வாரம் முதல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டியை திருப்பூர் மாவட்ட தபால் துறை அறிவித்துள்ளது.ஐந்து முதல் 15 வயது வரை உள்ள போட்டியாளர்கள், ' சுய துாய்மை', 16 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு, ' கோவிட் 19 காலத்தின் போதான வாழ்க்கை', 36 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 'கோவிட் 19 பின்னர் உலகம்' என்ற தலைப்புகளில், அஞ்சல் தலை வடிவமைப்பு படைப்புகள் இருக்க வேண்டும்.படைப்புகளை எந்தவிதமான தாள்களிலும், போட்டியாளர்கள் தங்களின் கைப்பட வரைந்து அனுப்ப வேண்டும். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அல்லது பிரின்ட் அவுட்களுக்கும் அனுமதி இல்லை. போட்டியாளர்கள், தங்களின் படைப்புகளை, விரைவு அல்லது பதிவு தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட போட்டியாளர்கள், ''The Supdt of post offices, tirupur division, tirupur 641601'' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். படைப்பு அனுப்பப்படும் தபாலில், ''postal week 2020 -philately day-----stamp design competition'' என குறிப்பிட்டிருக்க வேண்டும். பதிவுகளுடன், போட்டியாளரின் பெயர், வயது, பாலினம், பிரிவு, தொழில், முகவரி, மொபைல் எண், இமெயில் முகவரி, இந்தியர் என்பதையும் குறிப்பிட்டு, அக்., 10ம் தேதிக்குள், குறிப்பிட்ட முகவரியில் சென்றடையும் வகையில் படைப்புகளை அனுப்ப வேண்டும்.இதன் பின்னர் அனுப்பப்படும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனவும் தபால் துறை தெரிவித்துள்ளது. மேலும், போட்டி குறித்த கூடுதல் தகவல்களுக்கு, indiapost எனப்படும் தபால் துறை இணையதளத்திலும் பார்வையிடலாம்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X