ஏர்போர்ட்டில் துப்பாக்கி தோட்டா... குடுத்துட்டு போனாரா இலங்கை தாதா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

29 செப்
2020
10:11
பதிவு செய்த நாள்
செப் 29,2020 00:34

'டிவி'யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த, அ.தி.மு.க., செயற்குழு சம்பந்தமான செய்தியை, ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள் சித்ரா.காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''வடை போச்சேன்னு சொல்ற மாதிரி, வருமானம் போச்சேன்னு கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் புலம்புறாங்களாம்,'' என, பேச்சை துவக்கினாள்.காபியை ஒரு மடக்கு உறிஞ்சிய சித்ரா, ''மித்து, அந்தக்காலத்துல, இல்லீகலா வேலை செஞ்சு கொடுக்கறதுக்கு லஞ்சம் வாங்குனாங்க; அப்புறம், கடமையை செய்றதுக்கே வாங்க ஆரம்பிச்சாங்க. இப்ப, இலவசமா கொடுக்க வேண்டிய சர்ட்டிபிகேட்டுக்கும் பணம் பறிக்கிறாங்க,''


''அக்கா, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். லஞ்சம் வாங்குறது தெரியுது; எதுக்கு வாங்குறாங்கன்னு சொன்னாதானே தெரியும்,'' என, விடாப்பிடியாக கிளறினாள், மித்ரா.காபியை குடித்து முடித்த சித்ரா, ''கார்ப்பரேசன் வார்டு சுகாதார ஆய்வாளர் அலுவலகத்துல பிறப்பு சான்று கொடுக்குறாங்க. ஒரு சான்று இலவசமா கொடுக்கணும்; கூடுதலா வாங்கும் ஒவ்வொரு சான்றுக்கும், 200 ரூபாய் பணம் செலுத்தி, ரசீது இணைக்கணும். ஆனா, காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் இருக்கற வார்டு ஆபீசுல, ஒரு சர்ட்டிபிகேட் வாங்குறதுக்கு, 500 ரூபாய் வசூலிக்கிறாங்களாம்,''''அச்சச்சோ... அப்புறம்...''


''கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் மூவ்களை, விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்காணிச்சிட்டு இருக்காங்களாம். கிளப், மதுபான கூடம், வீக் என்ட் பார்ட்டிக்குச் செல்லும் இடங்களை உன்னிப்பா கண்காணிக்க ஆரம்பிச்சிருக்காங்களாம்,''''அக்கா, விஜிலென்ஸ் அதிகாரி மேலேயே பெட்டிசன் போட்டிருக்கறதா கேள்விப்பட்டேனே,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.''அதுவா, ஒரு அதிகாரி, எட்டு வருஷமா, நம்மூரிலேயே வேலை பார்க்குறாராம்; அவரை, டிரான்ஸ்பர் செய்றதுக்கு பலரும் முயற்சி செஞ்சிருக்காங்க; எதுவும் எடுபடலையாம்,''''அவருடன் வேலை பார்த்தவங்க பலரும், பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திட்டாங்களாம்; இவரு மட்டும் நகராம இருக்கறதுனால, சக அதிகாரிகளுக்கு, அவர் மேல செம கடுப்பாம். மறுபடியும் பெட்டிஷன் போட்டுருக்காங்க,''''போலீஸ் நெனைச்சா, என்ன வேணும்னாலும் செய்வாங்க போலிருக்கு. 10 டன் ரேஷன் அரிசி விவகாரத்தை, முழுசா முழுங்கிட்டாங்களாமே,''''அதுவா, சிட்டி பார்டர்ல, போன வாரம், ரேஷன் அரிசி கடத்திட்டு போன லாரியை, உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்காரங்க பிடிச்சாங்க. விசாரணை செஞ்சுக்கிட்டு இருந்தபோதே, லாரியை விடச் சொல்லி, ஒரு உயரதிகாரியிடம் இருந்து போன் வந்துச்சாம். வேறு வழியில்லாம, அந்த லாரியை விட்டுட்டாங்களாம்,'' என்றபடி, ''ஏர்போர்ட் வரைக்கும் போகணும்; வர்றீயா,'' என்றபடி, ஸ்கூட்டரை ஆன் செய்தாள் சித்ரா.பின் இருக்கையில் அமர்ந்து கொண்ட மித்ரா, ''அக்கா, ஏர்போர்ட் கழிப்பறையில், துப்பாக்கி குண்டு எடுத்தாங்களே; விசாரணை செய்றாங்களா, இல்லையா, கப்-சிப்னு இருக்கே,'' என, நோண்டினாள்.'மித்து, மொத்தம், 6 தோட்டா எடுத்தாங்க. அதில், 4 தோட்டாக்களில், வெடிமருந்து இருந்திருக்கு. வெடிமருந்து இருந்த மூன்று தோட்டாக்கள், கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக் கூடியதாம். ஒன்னு, ஏ.கே., 47 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக் கூடியதாம். அதனால, போலீஸ் வட்டாரம் அதிர்ந்து போயிருக்கு,''''சமீபத்தில் உயிரிழந்த இலங்கை தாதா, நம்மூர்ல ரெண்டு வருஷம் பதுங்கியிருந்தாரு. அவரது தொடர்பில் இருந்தவங்களை பார்க்க, யாராவது வந்திருப்பாங்களோன்னு சந்தேகம் இருக்கு. இறப்பதற்கு முன்னாடி, தன்னுடைய துப்பாக்கியை, கூட்டாளியிடம் கொடுத்திருக்காரு. அதனால, 'சிசி டிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்றாங்களாம்,''''அக்கா, அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பிச்சிடுச்சே. உள்ளூர் அரசியல் செய்தி எதுவும் சொல்லலையே,'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.''மித்து, கவுண்டம்பாளையம், துடியலுார், பெரியநாயக்கன் பாளையம் ஏரியாவை சேர்ந்த தி.மு.க., - பாரதிய ஜனதா கட்சிக்காரங்க, ஆடிப்போயிருக்காங்க,''''ஏன்க்கா, அவுங்களுக்கு என்ன? அவுங்கவுங்க 'ரூட்'டுல போனாலும், உடனுக்குடன் பதிலடி கொடுக்குறாங்களே,''''அதில்லப்பா, கெத்து காட்டணும்ங்கிறதுக்காக, ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு ஏகப்பட்ட கூட்டம் சேர்க்குறாங்க. ரெண்டு கட்சியை சேர்ந்த, உள்ளூர் தலைவர்களில் சிலருக்கு தொற்று பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் இருக்காங்க. அதனால, தொண்டர்கள் பீதியில் சுத்துறாங்களாம்,''''அதிருக்கட்டும், கவுண்டம்பாளையம் தொகுதியில், தி.மு.க.,காரங்க கொஞ்சம் வேகம் காட்டுறாங்களாமே,''''யெஸ், உண்மைதான்! போன தேர்தலில், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் தொகுதியில், குறைஞ்ச ஓட்டு வித்தியாசத்துலதான், தி.மு.க.,வுக்கு வெற்றி கைநழுவி போச்சு. அடுத்த வருஷம் நடக்கப் போற தேர்தல்ல, எப்படியாச்சும் ஜெயிச்சே ஆகணும்னு, கவுண்டம்பாளையம் தி.மு.க.,காரங்க கங்கணம் கட்டிக்கிட்டு களமிறங்கியிருக்காங்க,''''கடந்த தேர்தல்ல உள்ளடி வேலை செஞ்சவங்க யாரு, கறுப்பு ஆடுகள் யாருன்னு லிஸ்ட் தயாரிக்கிறாங்களாம். அவுங்களை சந்திச்சு, சமாதானம் பேசுவாங்களாம்; ஒத்துவரலைன்னா, களையெடுக்க முடிவு செஞ்சிருக்காங்களாம்,''
''இன்னொரு விஷயம்! ஒண்டிபுதுார் ஏரியாவுல அடுக்குமாடி குடியிருப்பில், 'டீலிங்' பேசி, கரன்சி அள்ளிய லேடி அதிகாரி, தற்காலிகமாக வீட்டை காலி செஞ்சிருக்காங்களாம். அனேகமாக, அந்த அதிகாரியை பதவியில் இருந்து துாக்கிடுவாங்கன்னு பேசிக்கிறாங்க,''''அந்த லேடி அதிகாரிக்கு, சென்னை அதிகாரி நெருக்கம்னு சொல்லுவாங்களே,''''எவ்ளோ பெரிய அதிகாரியிடம் நெருக்கமா இருந்தாலும், தப்பு செஞ்சா, தண்டனை அனுபவிச்சுதானே ஆகணும். ஒரு உதாரணம் சொல்றேன், கேளுங்க''''கணக்குப்பிரிவுல ஒரு ஊழியர், 10 வருஷமா செல்வாக்கோடு இருந்தாரு. குறிப்பிட்ட சில ஒப்பந்த நிறுவனங்களின் கணக்குகளை, அவருதான் கையாள்வாராம். அவரையே வேறு மண்டலத்துக்கு மாத்திட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டிருக்கேன்,'' என்றபடி, 'சிட்ரா' ஸ்டாப் அருகே உள்ள பேக்கரி முன், ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.அப்போது, கல்வித்துறை அதிகாரி ஒருவரின் ஜீப், கடந்து சென்றது.
அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, கொஞ்ச நாளா, கல்வித்துறை சம்பந்தமா எந்த தகவலும் சொல்லலையே,'' என, அலுத்துக் கொண்டாள்.
''மித்து, நம்மூருக்கு முதன்மை கல்வி அலுவலரா நியமிச்ச உஷா, மார்ச் மாசம்தான் பொறுப்பேற்றார். மாவட்ட கல்வி அதிகாரியா இருக்கற ஒருத்தரு, முதன்மை கல்வி அதிகாரி சொல்றதை கேக்குறதில்லையாம்; தன்னிச்சையா முடிவு எடுக்குறாராம். கல்வித்துறை வட்டாரத்துல பரபரப்பா பேசிக்கிட்டு இருக்காங்க,''அங்கு வந்த தோழியை சந்தித்து விட்டு, ஸ்கூட்டரில் இருவரும் புறப்பட்டனர்.
அப்போது, ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டதும், ''அக்கா, ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே, பதக் பதக்னு இருக்குது. நம்மூர்ல நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, லட்சக்கணக்குல பணம் வாங்குறாங்களாமே,'' என, கேட்டாள் மித்ரா.
''ஆமா, மித்து! சில பிரைவேட் ஆஸ்பத்திரியில கட்டண கொள்ளையில் ஈடுபடுறாங்க. நாலு ஆஸ்பத்திரிக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கு. ஒரே ஒரு சின்ன ஆஸ்பத்திரிக்கு மட்டும் அனுமதியை ரத்து செஞ்சிருக்காங்க,''''அக்கா, அனுமதியை ரத்து செய்றதுக்கு பதிலா, மருத்துவமனை செயல்பாட்டை, மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் போதுமே,''''ஆமாப்பா, நீ சொல்றதும் சரியான யோசனைதான். ஆனா, அரசு தரப்பு கேக்கணுமே,'' என்றபடி, ஏர்போர்ட் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X