மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க., கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
03:58

கடலுார்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலுார் மாவட்டத்தில் தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். வி.சி.,கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.தி.மு.க., எம்.பி., ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், புகழேந்தி, காங்., மாநில நிர்வாகி ரமேஷ், மா.கம்யூ., மாதவன், அமர்நாத், இந்திய கம்யூ., குளோப், தி.மு.க., நிர்வாகி விஜயசுந்தரம், ம.தி.மு.க., ராமசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். சிதம்பரத்தில் நடந்த தி.மு.க.,நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட_செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., பங்கேற்று கண்டன உரையாற்றினார்..வி.சி., கட்சி பாலஅறவாழி, ம.தி.மு.க ., மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், கம்யூ., சேகர், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.திட்டக்குடியில் தி.மு.க., மேற்கு மாவட்டசெயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., மற்றும் காங்., தொகுதி ஒருங்கிணைப்பாளர் அன்பரசு, இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் சின்னதுரை, மா.கம்யூ., ரவிச்சந்திரன், வி.சி.,முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழன்பன், நகர செயலர் கவுதமன், த.வா.க., மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலர் சுரேந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட காங்., தலைவர் ராதாகிருஷ்ணன், த.வா.க., ஒன்றிய செயலாளர் ராசு, மா.கம்யூ தனபால் , வி.சி., அதியமான் உட்பட பலர் பங்கேற்றனர்.விருத்தாசலம் பாலக்கரையில் தி.மு.க., நகர செயலர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மந்தாரக்குப்பம் கடைவீதியில் சரவணன் எம்.எல்.ஏ., தலைமையிலும், புவனகிரி பாலக்கரையில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் மனோகர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும்,நெல்லிக்குப்பத்தில் தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையிலும், கீரப்பாளையம் அண்ணா சிலை அருகில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சபாநாயகம் தலைமையில் கம்யூ., வாஞ்சிநாதன், வி.சி.,அருண், ம.தி.மு.க., உத்திராபதி, காங்., பார்த்திபன்,காங்., கமிட்டித் தலைவர் நேர்முக உதவியாளர் செழியன், த.வா.க., அகில்ராஜ், உட்பட பலர் பங்கேற்றனர்.சேத்தியாத்தோப்பு பஸ் நிலையம் அருகில் தி.மு.க., நகர செயலாளர் பழனி மனோகரன் தலைமையிலும், ஸ்ரீமுஷ்ணத்தில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் தலைமையிலும், வடலுார் பேரூராட்சி அலுவலகம் எதிரே தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் கோவில் தெருவில், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துப் பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காட்டுமன்னார்கோவிலில் தி.மு.க., நகர செயலாளர் கணேசமூர்த்தி, காங்., மணிரத்தினம் ,வி.சி., கட்சி சக்திவேல் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குமராட்சி மேற்கு ஒன்றியம் சார்பில் லால்பேட்டை கைக்காட்டி பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சோழன் தலைமையிலும், நடுவீரப்பட்டில் ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X