| நெல் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை Dinamalar
நெல் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2020
04:39

காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் கன மழையால் சம்பா சாகுபடி நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் மற்றும் குமராட்சி டெல்டா பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒரு போக சம்பா நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். ஆகஸ்ட் கடைசி வாரத்தில் விதைப்பு செய்யப்பட்ட சம்பா சாகுபடி நாற்றுகள் 30 முதல் 35 நாட்கள் கொண்டதாக இருந்தது. டெல்டா பகுதியில் மழை இல்லாமல், கடும் வெயில் தாக்கம் காரணமாக இளம் நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியது. கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்ததால், விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை துவங்கினர். நேற்று முன்தினம் இரவு காட்டுமன்னார்கோவில் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் காட்டுமன்னார்கோவில் டெல்டா சாகுபடி இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. கடந்த ஒரு வாரமாக தண்ணீரின்றி அவதியடைந்த விவசாயிகள், இரவு பெய்த மழையால் டெல்டா பகுதி வெள்ளக்காடாக மாறியதால் கவலையடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X