| இளம் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் கைது Dinamalar
இளம் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2020
04:47

சேத்தியாத்தோப்பு,-சேத்தியாத்தோப்பு பகுதியில் இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய திருமணமான வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குப்பாளையத்தை சேர்ந்த 20 வயது பெண், பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். விருத்தாசலம் அடுத்த கோவிலாங்குப்பத்தைச் சேர்ந்த ஜான்ஜூலியஸ், 35; திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.ஜான்ஜூலியஸ் வடக்குப்பாளையத்தில் உள்ள உறவினர் ஜான்விக்டர் வீட்டிற்கு வரும்போது இளம்பெண்ணுடன் அறிமுகமாகி, காதலிக்குமாறு வற்புறுத்தினார்.அவர் காதலிக்க மறுத்த போது தான் இறந்து விடுவதாக கூறியதால் பயந்த அவர் ஜான்ஜூலியசை காதலித்தார்.இந்நிலையில், ஜான்ஜூலியஸ் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி இளம்பெண்ணை தனியாக வரவழைத்து ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். இதில் அவர் 8 மாத கர்ப்ப மானதால் திருமணம் செய்ய ஜான்ஜூலியஸ் மறுத்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து ஜான்ஜூலியசை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X