போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
06:15

மூன்றுபேர் கைது



தேவதானப்பட்டி : ஜெயமங்கலம் அருகே மேல்மங்கலம் மேற்கு காலனியைச் சேர்ந்தவர் முருகன் 50. வீட்டு விசேஷத்திற்காக சமுதாயக்கூடத்தில் வாழை மரம் கட்டியுள்ளார். மேலத்தெருவைச் சேர்ந்த செல்லத்துரை 25, இவரது நண்பர்கள் மாயி 21, சுபாஷ் 22, ஆகிய மூவரும் மதுபோதையில் வாழைமரத்தை சேதப்படுத்தினர். கண்டித்த முருகனை மூவரும் அடித்து கொலைமிரட்டல் விடுத்தனர். ஜெயமங்கலம் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். --



விபத்தில் மூவர் பலி



தேவதானப்பட்டி

தேவதானப்பட்டி மேற்குதெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரணன் 40. தர்மலிங்கபுரம் அருகே மேட்டுவளைவு பகுதியில் திரும்பிய போது எதிரே வந்த கார் மோதியது. இதில் வீரணன் சம்பவ இடத்திலே பலியானார். தேவதானபட்டி போலீசார் கார் டிரைவரை தேடி வருகின்றனர்.



*கூடலுார்-கூடலுாரைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணா 28. 'ெஹல்மெட்' அணியாமல் நடுத்தெருவில் டூ வீலரில் சென்றபோது டயர் வெடித்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கூடலுார் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.



*தேனி -முத்துலாபுரம் கிழக்குத்தெரு சேதுபதி 29. டூவீலரில் 'ஹெல்மெட்' அணியாமல் கம்பம்- - தேனி மெயின் ரோட்டில் சென்றார். உப்பார்பட்டி பிரிவு அரசு சட்டக்கல்லுாரி அருகில் கோம்பை அரண்மனைத்தெரு சக்திவேல் 18, என்பவர் 'ெஹல்மெட்' அணியாமல்ஓட்டிவந்த டூவீலர் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். மருத்துவமனையில் சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--



வீட்டில் திருட்டு



பெரியகுளம் : தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்த கல்லுாரி பேராசிரியை குணசுந்தரி 55. மதுரைக்கு மகளை பார்க்க சென்றார். மர்மநபர்களால் வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு 75 ஆயிரம் மதிப்புள்ள21 கிராம் தங்க நகைகள் மற்றும் 1.5 லட்சம் மதிப்புள்ள 15 பட்டு சேலைகள் திருடுபோனது. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர். --

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X