விழுப்புரம் : விழுப்புரம் பெரிய காலனி நாயகன்தோப்பை சேர்ந்தவர் விஜய், 26; பிரபல சாராய வியாபாரியான இவர் மீது, விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரது குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ராதாகிருஷ் ணன் பரிந்துரை செய்தார்.அதையேற்று, கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின்பேரில், தடுப்பு காவல் சட்டத்தில் விஜய் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.