விழுப்புரம் : லஞ்சம் வாங்கிய வழக்கில், நகரமைப்பு அலுவலர் மற்றும் உதவி மின்பொறியாளர் ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் நகராட்சி, நகரமைப்பு அலுவலர் ஜெயவேல், கட்டட அனுமதி வழங்க சில தினங்களுக்கு முன் 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோன்று, இலவச மின் இணைப்பு வழங்க 27 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மயிலம் உதவி மின்பொறியாளர் புருஷோத்தமனும் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து, நகரமைப்பு அலுவலர் ஜெயவேலை சஸ்பெண்ட் செய்து, சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். உதவி மின்பொறியாளர் புருஷோத்தமனை சஸ்பெண்ட் செய்து, விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) மதனகோபால் உத்தரவிட்டுள்ளார்.