'இளைய சமுதாயத்தை ஆரோக்கியமாக உருவாக்க வேண்டும்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
23:40

சென்னை : ''துடிப்புமிக்க, ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்க, அவர்களுக்கு சரியான பாதையை நாம் ஏற்படுத்தி தர வேண்டும்,'' என, பெற்றோர் மற்றும் போலீசாருக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை கூறினார்.இளம் சிறார் நீதி சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட, குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்து, சென்னை, வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு நடந்தது.இதில், சிறுவர் நீதிக் குழுமம், குழந்தைகள் நல காவல் அலுவலர், நன்னடத்தை அலுவலர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பயிற்சி வகுப்பில், குழந்தைகள் தொடர்பான அனைத்து சட்டங்களிலும் கூறப்பட்டுள்ள சரத்துகள், இழப்பீடு தொகை பெறுவது, காவல், சமூக நலம் மற்றும் நீதித்துறைகள் இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டன.இது குறித்து, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது:நம் குழந்தைகள் தவறு செய்யும்போது, மன்னிப்பது போல், மற்ற குழந்தைகளையும் நல்வழிப்படுத்த வேண்டும்.குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மனப்பக்குவம் இல்லாததால், தவறு செய்கின்றனர். அவர்களுக்கு, நன்மை, தீமை குறித்து விளக்க வேண்டியது நம் கடமை.குழந்தைகளிடம், பெற்றோர், போலீசார் என, அனைத்து தரப்பினரும், இயந்திரத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது. துடிப்புமிக்க, ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்க, அவர்களுக்கு சரியான பாதையை நாம் ஏற்படுத்தி தர வேண்டும்.தவறு செய்யும் சிறுவர்களை தண்டிக்கும்போது, அவர்கள் குற்றவாளிகளுடன் இணைந்து, மீண்டும் குற்றத்தில் ஈடுபட, வாய்ப்புகள் அதிகம்.அடையாறு பகுதியில், குற்றங்களில் ஈடுபட்ட, 46 சிறுவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாழ்வாதார பயிற்சி மற்றும் வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், சென்னை முழுதும், சட்டத்திற்கு முரணாக செயல்படும் சிறுவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் வாழ்வாதார பயிற்சி அளிக்கப்படும்.அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற, தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க, சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
30-செப்-202021:57:08 IST Report Abuse
babu சினிமாவில ஸ்கூல், காலேஜ் பசங்களை பத்தி மட்டுமே, அதுவும் வீடு, சமூகம், பள்ளிகள் எதை தடுக்கின்றதோ அதை மட்டுமே ஃபோக்கஸ் செய்து போதித்துவிட்டு(சென்சார் போர்டின் U சர்ட்டிபிகேட்டுடன்), சட்டவிரோத செயல்களை ஹீரோயிஸம் போல விடலைகளுக்கு காட்டிவிட்டு, (மது,மாது, கள்ள உறவு, ஆன்ட்டி, புகை, கஞ்சா) விடலைகள் வளர்ந்து சமூகத்திற்கு வந்தவுடன் அறிவுரைகளை அள்ளி, அள்ளி தெளிப்பது. குழந்தை தொழிலாளர்கள் சினிமாவிற்கு மட்டும் விதிவிலக்காம் அதுவும் குழந்தைகளை வைத்து அடல்ட் வசனம், சட்டவிரோத, சமூகவிரோத வசனங்கள் பேச வைத்து காட்சிகள் எடுப்பது எல்லாம் குற்றமில்லையாம்.
Rate this:
Cancel
30-செப்-202009:03:49 IST Report Abuse
ஆப்பு பொள்ளாச்சி, மவுலிவாக்கம் நல்லவர்களை பத்திரமா வழக்கு எதுவும் இல்லாம ஜெயில்ல வெச்சுக்கிட்டு இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டா இருக்கணும்.
Rate this:
Cancel
30-செப்-202007:25:53 IST Report Abuse
ரத்தினம் salute for your motivated speech and directions. we parents must show social responsibility to nurture young generation people
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X