| 'இளைய சமுதாயத்தை ஆரோக்கியமாக உருவாக்க வேண்டும்' Dinamalar
'இளைய சமுதாயத்தை ஆரோக்கியமாக உருவாக்க வேண்டும்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 செப்
2020
23:40

சென்னை : ''துடிப்புமிக்க, ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்க, அவர்களுக்கு சரியான பாதையை நாம் ஏற்படுத்தி தர வேண்டும்,'' என, பெற்றோர் மற்றும் போலீசாருக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை கூறினார்.



இளம் சிறார் நீதி சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட, குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்து, சென்னை, வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு நடந்தது.இதில், சிறுவர் நீதிக் குழுமம், குழந்தைகள் நல காவல் அலுவலர், நன்னடத்தை அலுவலர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



பயிற்சி வகுப்பில், குழந்தைகள் தொடர்பான அனைத்து சட்டங்களிலும் கூறப்பட்டுள்ள சரத்துகள், இழப்பீடு தொகை பெறுவது, காவல், சமூக நலம் மற்றும் நீதித்துறைகள் இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டன.இது குறித்து, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது:நம் குழந்தைகள் தவறு செய்யும்போது, மன்னிப்பது போல், மற்ற குழந்தைகளையும் நல்வழிப்படுத்த வேண்டும்.



குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மனப்பக்குவம் இல்லாததால், தவறு செய்கின்றனர். அவர்களுக்கு, நன்மை, தீமை குறித்து விளக்க வேண்டியது நம் கடமை.குழந்தைகளிடம், பெற்றோர், போலீசார் என, அனைத்து தரப்பினரும், இயந்திரத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது. துடிப்புமிக்க, ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்க, அவர்களுக்கு சரியான பாதையை நாம் ஏற்படுத்தி தர வேண்டும்.தவறு செய்யும் சிறுவர்களை தண்டிக்கும்போது, அவர்கள் குற்றவாளிகளுடன் இணைந்து, மீண்டும் குற்றத்தில் ஈடுபட, வாய்ப்புகள் அதிகம்.



அடையாறு பகுதியில், குற்றங்களில் ஈடுபட்ட, 46 சிறுவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாழ்வாதார பயிற்சி மற்றும் வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், சென்னை முழுதும், சட்டத்திற்கு முரணாக செயல்படும் சிறுவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் வாழ்வாதார பயிற்சி அளிக்கப்படும்.அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற, தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க, சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X