மதுரை மாவட்டத்தில் மணல் கடத்துவோருக்கு எச்சரிக்கை இனியும் தொடர்ந்தால் குண்டர் சட்டம்தான்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2020
01:32

மதுரை : மதுரை வைகயைாற்றில் மணல் கடத்துவோர் இனி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என எஸ்.பி., சுஜீத்குமார் எச்சரித்துள்ளார்.


திருவேடகம், சோழவந்தான், சிலைமான் உள்ளிட்ட வைகையாற்று பகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தப்படுகிறது. பெண்களை தினக்கூலியாக நியமித்து மூடைகளில் மணலை எடுத்து வரச்செய்கின்றனர். பின் ஓரிடத்தில் சேகரித்து அங்கிருந்து லாரிகளில் எடுத்துச்சென்று கூடுதல் விலைக்கு விற்கின்றனர். சிலர் மாட்டு வண்டி, டிராக்டர்களில் கடத்துகின்றனர். 'எம் சாண்ட்' மணல் பயன்பாட்டில் இருந்தாலும் ஆற்று மணலுக்கு இன்னும் மவுசு இருப்பதாலேயே இக்கடத்தல் தொடர்கிறது.
இதுதொடர்பாக மாவட்டத்தில் இதுவரை 315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 604 பேர் மீது வழக்குகள் உள்ளன. இதில் 311 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 438 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மணல் கடத்திலில் ஈடுபடுவோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என அரசு உத்தரவிட்ட நிலையில் முதன்முறையாக விரகனுார் விக்னேஷ் என்ற வெள்ளை பூனை 22, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.பி., சுஜீத்குமார் கூறுகையில், ''இனி வரும் காலங்களில் மணல் திருட்டில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்'' என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran R V - CHENNAI,இந்தியா
30-செப்-202013:06:56 IST Report Abuse
Baskaran R V இந்த நடைமுறை, எல்லா ஆறுகள், நீர் நிலைகளில் இருந்து சுரண்டப்படும் செயல்களுக்கு பொருந்த வேண்டும். சட்டம் கடுமையாக்கப் பட வேண்டும். ஆற்று மணல் சுரண்டப் படுவதை செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்கப்பட்டு தலைமை காவல் நிலையத்துக்கு அனுப்பும் வகையில் செய்திட வேண்டும். எந்த பாரபட்சமும் காட்டாமல் தண்டிக்கப்பட வேண்டும். அபராத தொகையோடு, எடுக்கப்பட்ட மணலினை, அதே ஆற்றில் அல்லது நீர் நிலைகளில் கொட்டப்பட நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். இத்தகைய வேலைகளில் ஈடுபடுவோரின் பின் பக்கம் எத்தகைய சக்திகள் இருக்கிறன்றன என்பதை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும். .இப்படி, நீர் நிலைகளை சுரண்டி தான் பிழைக்க வேண்டுமா ? மனது வலிக்கின்றது.
Rate this:
Cancel
30-செப்-202009:00:03 IST Report Abuse
ஆப்பு கடத்துறதுக்கு மணல் இன்னும் இருக்கா? சிரிப்பொலி டி.வி மாதிரி இருக்கு.
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
30-செப்-202008:06:52 IST Report Abuse
shyamnats வாகனத்தை ஒட்டியவரை கைது செய்வார்கள், இந்த கடத்தலை செயல் படுத்துபவரை கண்டு கொள்ள மாட்டார்கள். அரசியல் வியாதிகள் / அவர்கள் பினாமிகள் தானே முன்னின்று நடத்துகிறார்கள். சும்மா கண் துடைப்பு நாடகங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X