| பதிவுத் துறையில் பதவி உயர்வு பணி மூப்பு வரையறையால் சிக்கல் Dinamalar
பதிவுத் துறையில் பதவி உயர்வு பணி மூப்பு வரையறையால் சிக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 செப்
2020
06:01

சென்னை : இடஒதுக்கீடு அடிப்படையில் பணிமூப்பு நிலை மறுவரையறை செய்யப்படுவதால் பதிவுத் துறையில் சார் பதிவாளர் முதல் கூடுதல் ஐ.ஜி. வரையிலான 300 பேரின் பதவி உயர்வுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.



பதிவுத்துறை உதவியாளர்களை இரண்டாம் நிலை சார் பதிவாளர்களாக நியமிப்பதில் நிர்வாக குழப்பம் ஏற்பட்டது. இதில் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி இட ஒதுக்கீட்டை பின்பற்றி பணிமூப்பு மறுவரையறை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்காக டி.ஐ.ஜி. சுதா மால்யா தலைமையில் 10 பேர் அடங்கிய கமிட்டி அமைக்க பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா செப். 5ல் உத்தரவிட்டார். இந்த கமிட்டி தன் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க உள்ளது.இதுகுறித்து சார் பதிவாளர்கள் கூறியதாவது: ஐ.ஜி. உத்தரவுப்படி சுதா மால்யா கமிட்டி தன் அறிக்கையை இறுதி செய்துள்ளது.



இந்த அறிக்கை விரைவில் ஜோதி நிர்மலாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இக்கமிட்டியின் அறிக்கையை ஏற்று செயல்படுத்தினால் சார்பதிவாளர் முதல் கூடுதல் ஐ.ஜி. வரை 300 பேரின் பதவி உயர்வுக்கு ஆபத்து ஏற்படும்; பலர் பதவி இறக்கத்துக்கு ஆளாக நேரிடும்.குறிப்பாக தற்போது மாவட்ட பதிவாளர்களாக உள்ளவர்களில் சிலர் சார் பதிவாளர் நிலைக்கு வரலாம். சார் பதிவாளராக இருப்பவர்கள் மாவட்ட பதிவாளராக உயரலாம்.இவ்விஷயத்தில்பதிவுத்துறை தலைவர் நிர்வாக நலன் கருதி செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X