செய்தி சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2020
06:06

அடிதடியில் காயம்நிலக்கோட்டை:

சிலுக்குவார்பட்டியசை் சேர்ந்தவர் மனுவேல் ரத்தினம், 60. இவர் தனது எதிர்வீட்டில் உள்ள ஆரோக்கியராஜிடம் கழிவு நீர் தெருவில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். தகராறு ஏற்பட்டு ஆரோக்கியராஜ் தாக்கியதில் மனுவேல்ரத்தினம், மனைவி லீமாரோசிக்கு காயம் ஏற்பட்டது. நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.----தொழிலாளி இறப்புவத்தலக்குண்டு:

நிலக்கோட்டை அருகே குண்டலப்பட்டியைச் சேர்ந்தவர் கோபி 50. சுமை துாக்கும் தொழிலாளியான இவர் வெங்கடாஸ்திரிகோட்டை ரோடு ஓரத்தில் இறந்து கிடந்தார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.---மின்ஊழியர் ஆர்பாட்டம்திண்டுக்கல்:மின்வாரியத்தில் தனியார் மயமாதலைக் கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது நடவடிக்கையை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதில் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் உமாபதி தலைமை வகித்தார். ---கிணற்றில் ஆண் சடலம்ஒட்டன்சத்திரம்:

பழைய காளாஞ்சிபட்டியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் அண்ணாத்துரை தலைமையிலான குழுவினர் சடலத்தை மீட்டனர். இறந்து சில நாட்கள் ஆனதால் அழுகி அடையாளம் தெரியாத நிலையில் காணப்பட்டது. ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.---தாழப்பறந்த விமானம்வேடசந்துார்:ரெங்கமலை சுற்றுப்பகுதிகளில் அடிக்கடி விமானங்கள், ஜெட் விமானங்கள் தாளப்பறந்தபடி செல்வது சமீப காலமாக வாடிக்கையாக உள்ளது. இதுபற்றி எந்த அதிகாரியிடம் கேட்டாலும் முறையாஅதிக சத்தத்துடன் சென்றதால் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் வியப்புடன் கண்டு களித்தனர்.---வாலிபருக்கு கத்திக்குத்து





ஏ.வெள்ளோடு அருகே கல்லுப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முனியாண்டி 33. இவரது தம்பி சந்தோஷ்குமார் 19, சேவல் வாங்கி வந்துள்ளார். முனியாண்டி கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசமடைந்த சந்தோஷ்குமார், அண்ணனை கத்தியால் குத்தினார். முனியாண்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அம்பாத்துரை போலீசார, சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.--வாலிபர் பலிவேடசந்துார்:கல்வார்பட்டி ஊராட்சி காந்திநகரை சேர்ந்தவர் குமார்ராஜா மகன் மணிகண்டன் 21. தொழிலாளி. நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலை வழியாக காந்திநகர் சென்றார். பிரிவு அருகே திரும்பும்போது, சேலம் சென்ற டயோட்டா கார் மோதியது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கூம்பூர் எஸ்.ஐ.,வேல்ராஜ் விசாரிக்கிறார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X