விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு 11,586 ஆக உயர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2020
06:15

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு 11,586 ஆக உயர்ந்துள்ளது.



விழுப்புரம் மாவட்டத்தில் 11,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 97 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 964 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று 98 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 11,586 ஆக உயர்ந்துள்ளது.



கொரோனா முன்னெச்சரிக்கையாக 1,083 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதுவரை நோயில் இருந்து குணமடைந்த 10,524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல்மருவத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விழுப்புரம் கே.கே., ரோடு மாந்தோப்பு தெருவை சேர்ந்த 50 வயது நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.



இதனால், மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.தலைமை ஆசிரியர் பலி விழுப்புரம் கே.கே., ரோடு கந்தசாமி லே அவுட்டை சேர்ந்தவர் பாலு, 50; கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். இவர் கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனை செய்தபோது, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மேல்மருவத்துார் தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாலு இறந்தார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X