| மின்னல் தாக்கி ஒருவர் பலி Dinamalar
மின்னல் தாக்கி ஒருவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 செப்
2020
06:36

பாகூர்; கிருமாம்பாக்கத்தில் இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்னல் தாக்கி இறந்தார்.கிருமாம்பாக்கம் - பிள்ளையார்குப்பம் சாலையைச் சேர்ந்தவர் முருகன் 45; கூலித் தொழிலாளி. இவருக்கு துளசி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.கிருமாம்பாக்கம் சுடுகாட்டில் நேற்று மாலை நடந்த மூதாட்டி உடலை அடக்கம் செய்யும் பணியில் முருகன் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, திடீரென இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால், முருகன் உள்ளிட்டோர் ஆங்காங்கே இருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றனர்.மழை லேசாக விட்டதும், முருகன் அருகில் நிறுத்தி வைத்திருந்த தனது சைக்கிளை எடுக்கச் சென்றபோது, மின்னல் தாக்கி இறந்தார்.கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X