திண்டிவனம் : வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்
.விழுப்புரம் மாவட்டம், திண் டிவனம், மரக்காணம் ரோடு மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் சரிதா, 33. இவரது கணவர் சாமிநாதன், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த சரிதாவிற்கும், அதே கம்பெனியில் வேன் டிரைவராக பணி புரிந்த அருண்குமார்,30; என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.இருவரும் கடந்தாண்டு ஜூலை 4ம் தேதி, மயிலம் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, மகாத்மா காந்தி நகரில் வசித்து வந்தனர்.இந்நிலையில், அருண்குமார், அவரது பெற்றோர் துாண்டுதலின் பேரில் வரதட்சணை கேட்டு சரிதாவை துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து சரிதா அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, அருண்குமாரை கைது செய்தனர். அவரது தந்தை குப்புசாமி, தாய் செல்வி ஆகியோரை தேடி வருகின்றனர்.