திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே, நள்ளிரவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், மூதாட்டி இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலத்தை சேர்ந்தவர் சரோஜா,70; இவரது மகன் இளங்கோவன்,44. இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தனர். இரவு 1.30 மணியளவில் பெய்த கன மழையின்போது, வீட்டின் சுவர் இடிந்து, இருவர் மீதும் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சரோஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த இளங்கோவன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஏனாதிமங்கலம் வி.ஏ.ஓ., ஜெயபிரகாஷ் நாராயணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.