ஏமாற்றாதே... ஏமாறாதே! ரேஷன் கடைகளில் தரமற்ற 'மாஸ்க்':நம்பி அணிவோருக்கு தொற்று 'ரிஸ்க்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

02 அக்
2020
04:43
பதிவு செய்த நாள்
அக் 02,2020 00:53

கோவை:கோவை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் 'மாஸ்க்', தரமற்றவையாக இருக்கின்றன. இந்த மாஸ்க்கை அணிந்து வெளியே செல்பவர்களை, நோய்க்கிருமிகள் தாக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.கொரோனா பாதிப்பு காரணமாக, தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகள் வாயிலாக இலவச முககவசம்ஆக., 5ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என அரசு அறிவித்தது.


ஆனால், கோவையில் தற்போது வரை முழுமையாக வந்தபாடில்லை. ஊடகங்களில் செய்தி வந்ததன் காரணமாக அவசரமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.கோவை மாவட்டத்தில், 1,048 ரேஷன் கடைகளில், 9 லட்சம் ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இவ்வட்டைகளின், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையின் படி, கோவையில், 65 லட்சம் மாஸ்க் வினியோகிக்கப்பட வேண்டும்.தற்போது வரை, நகர்ப்புற பகுதிகளுக்கு, 21 லட்சம் முககவசங்கள்மட்டுமே வந்துள்ளன. இதில், தரமில்லை எனக்கூறி, 8 லட்சம் முககவசங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், இந்த மாஸ்க்குகள் தரமின்றி இருப்பதாகவும், ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த இயலாது என்றும் புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கைத்தறி துறையினர் மாஸ்க்கின் தரத்தை, ஆய்வு செய்து அனுமதி வழங்குகின்றனர். அவற்றை ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கிறோம். அதோடு எங்கள் வேலை முடிந்தது' என்றார்.


இது குறித்து, கைத்தறித்துறை அதிகாரி கூறுகையில், 'கோவை சிட்ரா அமைப்பில், தர ஆய்வுக்கு நுாலை அனுப்பி, ஆய்வு செய்து, தரமுள்ளவை மட்டுமே மாஸ்க் தயாரிப்புக்கு அனுமதிக்கப்படுகிறது. அத்துணி, முழுமையும் காட்டனால் ஆனவை. பொதுமக்கள் துவைத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்' என்றார்.


மூன்று அடுக்குகள் இல்லைதரமான மாஸ்க் என்பது, 'த்ரீ பிளை' அதாவது, துணியில் மூன்று அடுக்குகள் இருக்க வேண்டும். படிக்கட்டு போன்ற மூன்று மடிப்புகள் அல்ல. பொங்கலுக்கு வழங்கும் வேட்டி துணியில், கடமைக்கு மூன்று மடிப்பு வைத்து தைத்துள்ளனர். இதை அணிந்து கொண்டு, தைரியமாக வெளியே செல்ல முடியாது.ஒரு முககவசம், 6.25 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான தரம் இல்லை. ஒரு முறை துவைத்தால் சுருங்கி விடும். மீண்டும் பயன்படுத்தினால், மூக்கையும் வாயையும் முழுமையாக மறைக்க முடியாது.


தரத்தை நிரூபிக்கட்டும்!கொரோனா தொற்று அதிகரித்து வரும் இவ்வேளையில், இது போன்ற தரமற்ற மாஸ்க் வழங்கி, ஏழைகளின் உயிரோடு அரசு விளையாடுவதாக, பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.அரசு வழங்கும் இந்த மாஸ்க், தரமுள்ளவை என நிரூபிக்க, முதலில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இந்த மாஸ்க்கை அணிந்து, தைரியமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கட்டும்.கொரோனா வைரசின் முன், எல்லா உயிர்களும் ஒன்றுதானே!

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
02-அக்-202023:07:03 IST Report Abuse
RajanRajan அட கோவணம் கொடுத்தா அதை போயி மாஸ்கா மாட்டுனா அது யார் தப்பு. வுடாதே சுடலை இந்த அம்மாவழி ஊழலை.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-அக்-202023:04:17 IST Report Abuse
RajanRajan ஓகோ புரடக்ஷன்ஸ் அம்மாவழி, ரேசன் கடை இலவச குரானா மாஸ்க் வரை புகுந்து ஆட்டைய போட்டுட்டானுங்க பாரு.
Rate this:
Cancel
02-அக்-202012:13:37 IST Report Abuse
ஆப்பு ... கட்டலாமா?
Rate this:
Santi - ,
02-அக்-202023:06:18 IST Report Abuse
Santiகட்டுனா, Corona confirm 😂Indhe 6.25 Rs mask ku பதிலா, medical shople irundhu 5Rs mask vaanghi கட்டுனா kude thappichikkalam......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X