போலீஸ் செய்திகள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
போலீஸ் செய்திகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 அக்
2020
12:52

ஏலச்சீட்டு பணம் தராமல் மோசடி


சிவகாசி: சித்துராஜபுரம் பி.எஸ்.ஆர்., நகரை சேர்ந்தவர் ரெங்கசாமி 71. ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். சிவகாசி வெம்பக்கோட்டை கங்கர்செவல்பட்டியை சேர்ந்த ரகுராமன் சீட்டு பணம் கட்டியபின் இவருக்கான பணம் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரத்தை ஓராண்டாகியும் தராமல் ரெங்கசாமி ஏமாற்றி உள்ளார். சிவகாசி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.



மணல் திருட்டு: லாரி, இயந்திரம் பறிமுதல்


சிவகாசி: மங்களம் ஆர்.ஐ., மாரியப்பன் , சிவகாசி ஆர்.ஐ., கிருஷ்ணமூர்த்தி மேட்டுப்பட்டியில் திருட்டு மணல் கடத்திய டிப்பர் லாரி, மணல் அள்ளும் இயந்திரத்தை கைப்பற்றினர். டிரைவர்கள் தப்பினர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.நகை திருட்டுசாத்துார் : சாத்துார் காமாட்சி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி 53. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 அரை பவுன் தங்க செயின் திருடு போனது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.



சுவாமி சிலை திருடியவர் கைது


சிவகாசி: ஹவுசிங்போர்டு பகுதி வலம்புரி விநாயகர் கோயிலில் சிவன் பார்வதி பித்தளை சிலைகள் திருடு போனது. திருத்தங்கல் போலீசார் அம்மன்கோவில்பட்டி ரஞ்சித்குமாரை 40, கண்காணிப்பு கேமரா உதவியுடன் அடையாளம் கண்டறிந்து கைது செய்து சிலைகளை மீட்டனர்.மனைவி, பிள்ளைகள் மாயம்விருதுநகர்: திருச்சியை சேர்ந்த செல்வராஜ் 40. இவர் மனைவி கோதைநாயகி, குழந்தைகள் ஸ்ரீ 12, திவாகர் 8, ஹர்சிதா 6 நால்வரையும் விருதுநகர் மீசலுாருக்கு செப். 10ல் அனுப்பி வைத்தார். மாயமானதை தொடர்ந்து சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X