இரு வீடுகளில் திருடியவர் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
இரு வீடுகளில் திருடியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 அக்
2020
13:07

திண்டிவனம் : திண்டிவனம் உட்பட பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடிய பலே ஆசாமியை போலீசார் கைது செய்து, ரூ.1.90 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜெயபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்சங்கர், 49; இவர் காஸ் ஏஜன்சி நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் தனது குடும்பத்துடன், கோவில்பட்டிக்கு சென்றிருந்தார்.கடந்த மாதம் 13ம் தேதி இரவு மர்ம நபர்கள் செந்தில்சங்கரின் வீட்டின் பூட்டை உடைத்து 2.41 லட்சம் ரூபாயை திருடிச்சென்றனர். கடந்த மாதம் 16ம் தேதி, ஜெயபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் வீட்டில் புகுந்து 30,000 ரூபாய் மற்றும் 2 வெள்ளி கொலுசை திருடிச்சென்றனர். இச்சம்பவங்கள் குறித்த புகார்களின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்


.டி.எஸ்.பி., கணேசன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் தமிழ்மணி ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.


நேற்று அதிகாலை மரக்காணம் கூட்ரோடு சந்திப்பில், திண்டிவனம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.அவர் முரண்பாடான பதில்களை கூறவே, போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் விழுப்புரம் அடுத்த வளவனுார் கால்நடை மருத்துவர் வீதியைச்சேர்ந்த எழில் (எ) எழிலேந்தன், 38; என்பதும், ஜெயபுரத்தில் செந்தில்சங்கர், ரமேஷ் ஆகியோர் வீட்டில் திருடியதாக ஒப்புக்கொண்டார்.


மேலும், இவர் பண்ருட்டியில் கடந்த மாதம் ஓய்வு பெற்ற தாசில்தாரின் வீட்டில் திருடியதும், இவர் மீது சென்னை போலீசில் 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.திண்டிவனம் போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.1.90 லட்சம் ரூபாயையும் 2 வெள்ளி கொலுசையும் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X