குளத்தில் களம்! அத்திக்கடவு திட்டத்தில் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க அரசு அறிவுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2020
04:37

அன்னூர்;கொங்கு வட்டார மக்களின், 60 ஆண்டு கால கனவான, அத்திக்கடவு திட்டத்தில், அன்னுார் குளத்தில் பணிகள் துவங்கின.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், போதுமான மழை இல்லாமல், 2,000க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் வறண்டு போயுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக உள்ளன. பல நுாறு ஏக்கர் நிலங்கள் 'லே-அவுட்' களாக மாறி விட்டன.குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக, பவானி ஆற்றில் உபரியாக செல்லும் நீரை பயன்படுத்தி, மூன்று மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில் நீர் நிரப்ப, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, பல்வேறு அமைப்புகள், கட்சிகள், 60 ஆண்டுகளாக போராடி வந்தன.கடந்த, 2019 மார்ச்சில், இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு பணி உத்தரவு வழங்கப்பட்டது. பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டு, கடந்தாண்டு டிசம்பரில், பிரதான பணிகள் துவங்கின. இத்திட்டத்தில், ஆறு நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், 105 கி.மீ., துாரத்துக்கு, பிரதான குழாய்களும், 913 கி.மீ., துாரத்துக்கு, கிளை குழாய்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் பொதுப்பணித் துறையின், 32 குளங்கள் உட்பட, 1,044 குளங்களில், நீர் நிரப்பப்பட உள்ளது.இரு நாட்களாக...கோவை மாவட்டத்தில், 258, திருப்பூர் மாவட்டத்தில், 428, ஈரோடு மாவட்டத்தில், 358, குளங்களில் நீர் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக, அவிநாசி தொகுதியில், 494 குளங்கள் பயன்பெறுகின்றன. அன்னுார் ஒன்றியத்தில், அன்னுார், காட்டம்பட்டி என, இரண்டு குளங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.இதில், 117 ஏக்கர் பரப்பளவுள்ள அன்னூர் குளத்தில், கடந்த இரு நாட்களாக, அத்திக்கடவு திட்டத்தில் குளத்தின் கரைகளை பலப்படுத்தும் பணி நடக்கிறது. அங்கிருந்த புதர்கள், முள்செடிகள், குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதேபோல், 140 ஏக்கர் பரப்பளவுள்ள காட்டம்பட்டி குளத்திலும் பணி துவங்கியுள்ளது.உடனே துவங்கணும்இதுகுறித்து, அத்திக்கடவு திட்ட ஆர்வலர்கள் கூறியதாவது:பொதுப்பணித்துறை குளங்களில், சீரமைப்பு பணி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மீதமுள்ள கிராம ஊராட்சிகளில் பயன்பெற உள்ள, 150க்கும் மேற்பட்ட குளங்களில் குப்பை கிடங்குகள் உள்ளன. கரைகள் ஒழுங்கற்று இருக்கின்றன. தினமும் டன் கணக்கில், குப்பைகள் கொட்டப்படுகின்றன.சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்களும், ஒன்றிய நிர்வாகங்களும், இத்திட்டத்தில் பயன்பெறும் குளங்களிலும், துாய்மை பணியை உடனே துவங்க வேண்டும். சில மாதங்களில் குளங்களுக்கு தண்ணீர் வர இருப்பதால், இப்பணியை இப்போதே துவக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பொங்கியண்ணன் கூறுகையில், ''அத்திக்கடவு திட்டத்தில் பயன்பெற உள்ள, பொதுப்பணித்துறையின், 32 குளங்களில் மதகுகள் சரிசெய்து, முள் செடிகளை அகற்றிக் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. விரைவில் இப்பணிகளை முடிக்கும்படி அரசு தெரிவித்துள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X