ரயில்வே பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ரயில்வே பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 அக்
2020
11:30

விழுப்புரம் : ரயில்வே பெண் அதிகாரி வீட்டில் நகை உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.


விழுப்புரம் வழுதரெட்டி காந்தி நகரை சேர்ந்தவர் தியாகராஜன் மகள் சித்ரா, 29; சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த 5ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.கடந்த 6ம் தேதி அவரது எதிர் வீட்டை சேர்ந்த யாஸ்மின் என்பவர், சித்ராவிற்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.


இதையடுத்து, சித்ரா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 4 கிராம் நகை, டேப் மொபைல் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X