விருதுநகர்: முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்திக்குறிப்பு:அஞ்சலகங்களில் விழிப்புணர்வு பதாகைகள், புதிய சேமிப்பு கணக்குகள், இந்திய போஸ்ட்பேமன்ட் வங்கி கணக்கு, செல்வமகள் சேமிப்பு கணக்கு அனைத்து வகையான கணக்குகளும் துவங்குவதற்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழைய நடப்பு சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். அக். 13ல் அஞ்சல் தலை கண்காட்சி , 15ல் கொரோனாவிலும் உழைத்த தபால்காரர்கள் கவுரவிக்கப்படுகின்றனர், என குறிப்பிட்டுள்ளார்.