காரியாபட்டி: காரியாபட்டி வேளாண் அலுவலகத்தில் ஐ. எஸ். எப்., திட்டத்தில் அரசு பல நலத்திட்டங்களை மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
இதில் வேளாண் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் குழு ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆடு மாடு, கோழி உள்ளிட்டவைகளை தகுதியான நபர்களுக்கு கொடுக்காமல் ஒரே மாட்டை போட்டோ எடுத்து காண்பித்து பலருக்கு கொடுத்ததாக பேங்க் மூலம் முறைகேடு செய்து வருகின்றனர். குழு பெயரில் டிராக்டர், ரோட்டரி, உழவு வண்டியை தனி நபர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.
குழு விவசாயிகளுக்கு உபகரணங்கள் கொடுக்காமல் விற்பனை செய்கின்றனர். மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் , குழு பெயரில் உள்ள போலி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு திட்டங்களை விவசாயிகளின் பார்வைக்கு எழுதி வைக்க கோரி கலெக்டரிடம் காரியாபட்டி வேளாண் உழவர் விவாத கன்வீனர் நாசர்புளியங்குளம் சதுரகிரி புகார் கொடுத்தார்.இதை தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் விசாரணைக்கு வந்த நிலையில் ஆஜராக வந்தவர்களை அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள் சிலர் தாக்க முயன்றனர்.